Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ரணதம்போர் » ஈர்க்கும் இடங்கள் » ரணதம்போர் தேசிய பூங்கா

ரணதம்போர் தேசிய பூங்கா, ரணதம்போர்

25

ரணதம்போர் தேசிய காட்டுயிர் பூங்கா என்ற விசேஷ அந்தஸ்தைப் பெற்றுள்ள இது வட இந்தியாவிலுள்ள மிகப்பெரிய காட்டுயிர் வனச்சரகமாகும். இது ஒரு காலத்தில் ராஜவம்சத்தினரின் வேட்டைப்பகுதியாக இருந்துள்ளது. 1955ம் ஆண்டில் இது அதிகாரப்பூர்வ காட்டுச்சுற்றுலா வனச்சரகமாக அறிவிக்கப்பட்டது.

பின்னர் 1973ம் ஆண்டில் ‘புலிகள் பாதுகாப்பு திட்டத்தின் முதல் வனச்சரகமாக அறிவிக்கப்பட்டு,’ இறுதியாக 1980ம் ஆண்டில் இது ‘தேசிய காட்டுயிர்ப்பூங்கா’ எனும் சிறப்பை பெற்றது.

முக்கிய விலங்கான புலி மட்டுமல்லாமல், குள்ளநரி, சிறுத்தை, கழுதைப்புலி, சதுப்புநில முதலை, காட்டுப்பன்றி மற்றும் பலவகை மான்கள் போன்ற விலங்குகளும் இந்த காட்டுயிர்ப்பூங்கா’வில் வசிக்கின்றன.

இவை தவிர பலவகை தாவரவகைகளும் இங்கு காணப்படுகின்றன. அல்லிகள், லெம்னா மற்றும் தாமரை போன்றவற்றை இங்குள்ள நீர்நிலைகளில் அதிகம் பார்க்கலாம்.

392 ச.கி.மீ பரப்பளவில் இந்த ‘காட்டுயிர் பூங்கா’ பரந்து விரிந்துள்ளது. புலிகள் அதிகம் வசிக்கும் காட்டுப்பகுதியாக பிரசித்தி பெற்றுள்ள இந்த வனப்பகுதி இந்தியாவில் மிகச்சிறந்த காட்டுயிர்ப்பூங்காவாக புகழ் பெற்றுள்ளது.

இதனுள்ளே வனத்துறையினரால் அமைக்கப்பட்டுள்ள சாலைகளில் பயணிகள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். புகைப்படமெடுத்தல் மற்றும் படம் பிடித்தல் போன்றவற்றுக்கு உரிய ஏற்பாடுகளையும் வனத்துறை செய்து தருவது ஒரு விசேஷமான அம்சமாகும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Jul,Thu
Return On
31 Jul,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Jul,Thu
Check Out
31 Jul,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Jul,Thu
Return On
31 Jul,Fri