Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ரோஹ்தக் » ஈர்க்கும் இடங்கள் » அஸ்தல் போஹார்

அஸ்தல் போஹார், ரோஹ்தக்

17

அஸ்தல் போஹார் எனப்படும் இந்த மடம் குரு கோரக் நாத் மதப்பிரிவினரின் ஆன்மீக கேந்திரமாகும். இந்த பிரிவினர் சிவபெருமானை தீவிர பக்தியுடன் வணங்குபவர்கள் ஆவர். ரோஹ்தக் நகரத்திற்கு கிழக்கே 7 கி.மீ தொலைவில் 10ம் எண் ரோஹ்தக்-டெல்லி நெடுஞ்சாலையில் இந்த மடம் அமைந்துள்ளது.

புராணக்கதைகளின்படி, தற்போது பாகிஸ்தானில் இருக்கும் சியால்கோட் எனும் நகரத்தில் வசித்த ஒரு கோரக்நாத் பக்தரான பூரான் பகத் என்பவர் இந்த இடத்திற்கு ஒரு முறை விஜயம் செய்துள்ளார்.

இந்த ஸ்தலத்தின் இயற்கை அழகால் கவரப்பட்ட அவர் இது ஆன்மீக சடங்குகள் மற்றும் தியானத்திற்கு ஏற்ற இடமாக இருக்கும் என்று கருதினார். எனவே இந்த மடத்தை நிர்மாணித்தார். இருப்பினும் பின்னர் கவனிப்பின்றி கிடந்த இம்மடத்தை பாபா மஸ்த்நாத் எனும் குரு 1791ம் ஆண்டு புதுப்பித்து சீர்படுத்தினார்.

இந்த மடத்தில் பலவிதமான நினைவுப்பொருட்கள், புராதன அரும்பொருட்கள், கற்சிற்பங்கள், புனித நூல் பிரதிகள், நூல்கள் மற்றும் இதர ஆன்மீக சடங்குப்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.

கோரக்நாத் மதப்பிரிவுக்கான ஒரு முக்கிய ஆன்மீக கேந்திரமாக இந்த மடம் தற்போது பிரசித்தி பெற்றுள்ளது. துளையிடப்பட்ட காதுகளுடன் காட்சியளிக்கும் கன்பதா யோகிகள் மத்தியில் இந்த மடம் புனிதமாக கருதப்படுகிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
08 Sep,Tue
Check Out
09 Sep,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed