வட இந்தியாவின் எல்லா நகரங்களிலுமே தவறாமல் இந்த ராதா கிருஷ்ணன் கோயில் அமைந்திருக்கிறது. ஜாட் இனத்தார் அதிக எண்ணிக்கையில் வசிக்கும் மேஹம் நகரத்திலும் ஒரு பிரசித்தமான ராதாகிருஷ்ணன் கோயில் உள்ளது. பழைய பேருந்து நிலையத்துக்கு அருகில் 6 மற்றும் 8 வது வார்டு பகுதியில் சிந்தலா மொஹல்லா எனும் இடத்தில் இந்த கோயில் உள்ளது.
இந்த கோயிலின் கருவறையில் உள்ள ஷீ கிருஷ்ணர் சிலை அரிதான ஒருவகை கருங்கல்லில் வடிக்கப்பட்டுள்ளது. ஹிமாலயத்தில் மட்டுமே இவ்வகை கல் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. கிருஷ்ணர் – ராதையோடு தொடர்புடைய ஹோலி பண்டிகை இக்கோயிலில் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.