Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ரும்தேக் » ஈர்க்கும் இடங்கள் » ரும்தேக் மடம்

ரும்தேக் மடம், ரும்தேக்

10

ரும்தேக்கிலுள்ள ரும்தேக் மடம் கா=ங்டாக்கிலிருந்து 24 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த மடம் திபெத்திய புத்த மதத்தினரின் சமயஞ்சார்ந்த தலங்களில் ஒன்றாகும். இதனை தர்ம சக்ர மையம் என்றும் அழைப்பர்.

இந்த மடம் கடல் மட்டத்திலிருந்து 5800 அடி உயரத்தில் காங்டாக் நகரை நோக்கி உள்ளது. திபெத்துக்கு வெளியே உள்ள கக்யு லைன்யஜ்ஜின் முக்கிய மையமாக இது திகழ்கிறது.

இந்த நான்கு அடுக்கு மடம் திபெத்திலுள்ள ட்சுர்ப்ஹு மடத்தின் தோற்றத்தை தழுவி கட்டப்பட்டது. திபெத்தின் மீது சீனா நடத்திய தாக்குதலுக்கு பின்னர், திபெத்தின் கியால்வா கர்மபாவின் 16-வது அவதாரமானவர் சில துறவிகளோடு ரும்தேக் வந்து சேர்ந்தார்.

அவருக்கு அப்போதைய சோக்யல், ரும்தேக்கில் ஒரு பகுதியை வெகுமதியாக வழங்கி அங்கே மடமும் சமயஞ்சார்ந்த கல்வி மையமும் கட்டிக் கொள்ளச் சொன்னார்.

இந்த மடத்திற்கு பின்னால், புத்த மத படிப்பை கற்பிக்க, கர்ம நலந்தா கல்வி நிறுவனம் நன்கு அலங்கரிக்கப்பட்ட நிலையில் உள்ளது. உலகத்தில் இருந்து பல பேர் வந்து இங்கு மாணவர்களாக சேருகின்றன்றனர்.

இங்கு உள்ள ஒரு சிறிய அறையில் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட ஒரு தங்கத்தூண் உள்ளது. இந்த தூணில் 16-வது கியால்வா கர்மபாவின் அஸ்தி இருக்கிறது என்று நம்பப்படுகிறது.

ரும்தேக் தர்ம சக்ர மையம் இந்த மடத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த மையத்தில் சமயஞ்சார்ந்த பல சுவடுகளும் கலைப் பொருட்களும் உள்ளன.

இதனை காட்சியாக வைப்பதைத் தவிர ஒவ்வொரு வருடமும் பத்தாவது மாதத்தில் 28 மற்றும் 29 ஆம் தேதியில் நடனங்களும் நடைபெறும். சிக்கிமிலுள்ள மிக முக்கிய தலம் இது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Jul,Thu
Return On
31 Jul,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Jul,Thu
Check Out
31 Jul,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Jul,Thu
Return On
31 Jul,Fri