சஹரன்பூர் பகுதியில் அமைந்திருக்கும் மிக முக்கியத் தலம் அங்கிருக்கும் பொட்டானிக்கல் பூங்கா ஆகும். இந்த பூங்கா 1887ல் ஆங்கிலக் கிழக்கிந்திய நிறுவனத்தால் அமைக்கப்பட்டதாகும். பொட்டானிக்கல் ஆய்வு நடத்தப்பட்ட போது சஹரன்பூர் மிக ஒரு முக்கிய இடமாக விளங்கியது.
தற்போது இந்த பொட்டானிக்கல் பூங்கா, இந்தியாவின் கொல்கத்தாவிலிருக்கும் பொட்டானிக்கல் பூங்காவிற்கு அடுத்த முக்கியமானதாக விளங்குகிறது. அதோடு மலர்களைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் மிக முக்கிய மையமாக விளங்குகிறது.
மேலும் இந்த மையத்தில் பல மருத்துவத் தாவரங்களைப் பற்றிய ஆராய்ச்சியும் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. தற்போது இந்த பூங்கா தோட்டக்கலை ஆராய்ச்சி மற்றும் பயற்சி மையமாகவும் விளங்குகிறது.



Click it and Unblock the Notifications