சேலத்தின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு அழகிரிநாதர் கோயில், “கோட்டைப்பெருமாள் திருக்கோயில்” என்றும் வழங்கப்படுகிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இக்கோயில், இதன் சிற்பக்கலைக்காக பெரிதும் அறியப்படுகிறது. இக்கோயில், அழகிரி பெருமாள் மற்றும் மாரியம்மனுக்காக கட்டப்பட்ட கோயில்கள் சூழ அமைந்துள்ளது.
பல்வேறு திருவிழாக்கள் இக்கோயிலில் கொண்டாடப்படுகின்றன. அவைகளில் முக்கியமானது, வைகுண்ட ஏகாதசி திருவிழாவாகும். இச்சமயத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வழிபாடு செய்வதற்கு அலை மோதுகின்றனர்.
பிரமோத்ஸவம், நவராத்திரி, பவித்ரோத்ஸவம, புரட்டாசி மற்றும் ஆண்டாள் திருக்கல்யாணம் ஆகிய விழாக்களும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
ஆண்டாள் திருக்கல்யாணத்தின் போது திருவில்லிப்புத்தூரிலிருந்து, பிரத்யேகமாக தொடுக்கப்பட்ட பூமாலை தருவிக்கப்பட்டு, ஆண்டாள் அம்மைக்கு சூட்டப்படுகிறது. இவ்விழாக்காலங்களில், சேலம் நகருக்கு அருகில் உள்ள ஊர்களிலிருந்து பக்தகோடிகள், இங்கு வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.



Click it and Unblock the Notifications