சேலம் நகர், நான்கு முக்கியமான மசூதிகளின் உறைவிடமாக உள்ளது. இவ்வழிபாட்டுத் தலங்கள், இப்பகுதியில் வாழும் வேற்று மதத்தினரின் மத நல்லிணக்கத்துக்கு பெரிதும் பங்களிக்கின்றன.
ஜாமா மஸ்ஜித் தான், இந்நகரின் முதல் மசூதி ஆகும். இது நகரத்தின் மத்தியில், மணிமுத்தாறு நதிக்குத் தெற்கில் அமையப்பெற்றுள்ளது. மைசூரை ஆண்ட திப்புசுல்தானால் கட்டப்பட்ட இம்மசூதி கட்டாயமாகப் பார்க்க வேண்டிய ஒன்றாகும்.
திப்புசுல்தானால் வழிபடப்பட்ட இம்மசூதிக்கு, பிற்காலத்தில் ஆங்கிலேயர்கள் மசூதி இனாம் வழங்கி வந்துள்ளனர். மேலத்தெரு மசூதி மற்றும் கீழத்தெரு மசூதி ஆகியவை கோட்டைக்கு அருகில் அமைந்துள்ள பிரபலமான இரு மசூதிகளாகும். பழைய சந்தைக்குப் பக்கத்தில் உள்ள மொஹம்மதுபுரத்தில் உள்ள அல் அமீன் மஸ்ஜித், இங்குள்ள நான்காவது மசூதியாகும்.



Click it and Unblock the Notifications