உலகத்தில் உள்ள ஒரே சாயும் கோவில் என்ற பெருமை ஹியுமாவின் சாயும் கோவிலுக்கு உண்டு. சம்பல்பூருக்கு தெற்காக 23 கிமீ தொலைவில் உள்ள ஹியுமா என்ற அமைதியான கிராமத்தில் சிவ பெருமானுக்கான இந்த சாயும் கோவில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கோவில் கட்டப்பட்டதற்கு ஒரு பால்காரரின் கதையுடன் தொடர்பு இருக்கிறது. இந்த பால்காரர் மகாநதியை ஒவ்வொரு நாளும் கடந்து செல்வார்.
ஒவ்வொரு முறை இவர் நதியைக் கடந்து சென்ற பின்னரும், சிவ பெருமானுக்கு பிரார்த்தனை செய்து விட்டு, கொஞ்சம் பாலை இங்கிருந்த பாறையின் மீது ஊற்றுவார். இந்த விஷயம் வெளியே தெரிந்த பின், கங்கா வம்சி பேரரசரான மூன்றாம் அனங்காபீமா தேவர் இங்கே கோவிலை கட்டத் தொடங்கினார்.
இந்த கோவில் பல்வேறு ஆட்சியாளர்களால் புனரமைக்கப் பட்டுள்ளது. இந்த கோவில் சாய்வதற்கான காரணம் இன்னும் புதிராகவே உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் தனித்தனியாக உள்ள மூன்று கோவில்களும், மூன்று விதமான திசைகளில் உள்ளன. அதிசயமோ அல்லது தெய்வீகமோ இந்த கோவிலுக்கு ஒரு முறை வந்து செல்வது பயனுள்ள அனுபவமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications