சஞ்சியில் இருக்கும் குப்த ஆலயம் உலகம் முழுவதிலும் இருக்கும் ஆலயங்களிலேய மிகவும் எளிமையான ஆலயம் என்று வரலாற்று ஆசிரியர்களால் கருதப்படுகிறது. இந்த ஆலயம் இந்திய கட்டிடக்கலையின் அடிப்படையில் முறையாகக் கட்டப்பட்டிருக்கிறது. இந்த ஆலயம் சஞ்சிப் பகுதியையே அழகுபடுத்துகிறது என்று சொல்லலாம்.
இந்த குப்த ஆலயம் கிபி 5 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். இந்த காலம் குப்தர்களில் பொற்காலம் ஆகும். மேலும் குப்தர்கள் கால கட்டிடக்கலைக்கும் எடுத்துக்காட்டாக இந்த ஆலயம் விளங்குகிறது.
அதோடு கட்டிடக்கலையின் மறுமலர்ச்சியாகவும் இந்த ஆலயம் விளங்குகிறது. இந்த ஆலயத்தின் மேற்கூரை சமதளமாக இருக்கும். இதன் வாயில்கள் தூண்களால் தாங்கப்பட்டுள்ளன. இறுதியாக இந்த ஆலயம் இந்திய கட்டிடக்கலை வரலாற்றின் தொடக்கமாகவும் அமைந்துள்ளது.



Click it and Unblock the Notifications