சஞ்சியில் அமைந்திருக்கும் சஞ்சி ஸ்துபா ஒரு முக்கியமான சுற்றுலாத் தலமாகும். இந்த ஸ்துபா போபாலிலிருந்து 46 கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது. மொத்தம் 3 சஞ்சி ஸ்துபாக்கள் உள்ளன. இந்த ஸ்துபாக்கள் நன்றாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
சஞ்சி ஸ்துபா 1 மூன்றாவது நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். இந்த ஸ்துபாவின் உயரம் 16.4 மீ ஆகும். ஸ்துபா 2, இரண்டாவது நூற்றாண்டில் கட்டப்பட்டது. இந்த ஸ்துபா ஒரு மலையோரம் கட்டப்பட்டிருக்கிறது.
சஞ்சி ஸ்துபா 3, சஞ்சி ஸ்துபா 1க்கு அருகில் அமைந்துள்ளது. இந்த ஸ்துபா மீது அரை வட்ட வடிவம் கொண்ட மண்டபம் போன்ற ஒரு கிரீடம் காணப்படுகிறது.
சஞ்சியில் அமைந்திருக்கும் இந்த மூன்று ஸ்துபாக்களும் உலக சமயப் பண்பாட்டுத் தலங்களாக யுனஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த ஸ்துபாக்கள் பொதுமக்களுக்கு திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
இந்த மூன்று ஸ்துபாக்களும் உலகின் மிகப் பழைய கற்கட்டடங்களாகக் கருதப்படுகின்றன. இந்த ஸ்துபாக்களைப் பார்வையிட வழிகாட்டிகள் உதவி செய்யத் தயாராக இருக்கின்றனர். மேலும் இந்த ஸ்துபாக்களில் புகைப்படங்கள் எடுக்கவும் அனுமதி வழங்கப்படுகின்றன.