ஷீஷ் மஹால், சங்க்ரூர்

சங்க்ரூர் சுற்றுலாவின் பிரதான சுற்றுலாத் தலமாக விளங்குகிறது ஷீஷ் மஹால். சங்க்ரூரிலிருந்து 58 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்த மஹால். இந்த மஹாலின் பெயரை போலவே இங்கே கண் கவரும் வண்ண கண்ணாடிகள் பல உள்ளன.

இந்த மஹால் 'கண்ணாடி மாளிகை' என்றும் அழைக்கப்படுகிறது. அழகிய தோட்டங்கள், அடுக்குத்தளங்கள், நீரூற்றுகள் மற்றும் ஒரு செயற்கை ஏரி இதனை வண்ண மயமான இடமாக காட்சிப்படுத்தும்.

ஷீஷ் மஹால் நரேந்தர சிங் மகாராஜாவால் 1845-ஆம் கட்டப்பட்டதாகும். பின்னர் இது மலெர்கோட்லா நவாபிற்கு குடியிருப்பிடமாக திகழ்ந்தது.

நுழைவு கட்டணம் ஏதும் இல்லாமல் காலை முதல் மாலை வரை இங்கே சுற்றி பார்க்க வரலாம். சங்க்ரூரிலிருந்து இங்கு வருவதற்கு சாலைகள் நன்றாக இருப்பதால் டாக்சி அல்லது பேருந்து மூலமாக 25 நிமிடங்களில் வந்தடையலாம்.

Please Wait while comments are loading...