மிகப் பழமையான பஹரூச் நகரம் நர்மதா நதியின் முகத்துவாரத்தின் அருகே அமைந்துள்ளது. இந்த இடத்திற்கும் புராணத்திற்கும் மிக நெருங்கிய தொடர்புகள் உண்டு.
இந்து மத இதிகாசமான ஸ்கந்த புராணத்தின் படி, ஒரு காலத்தில் கிராமமாக இருந்த இந்த பஹரூச்சில் பிருகு முனிவர் வருவதற்கு முன்னர் மஹாலட்சுமி வாசம் செய்து வந்தார்.
ஸ்கந்த புராண குறிப்புகளைச் தவிர்த்து , பஹரூச் பற்றிய குறிப்புகள் பாகவத புராணம், சிவ புராணம், கூர்ம அவதார புராணம், மச்ச புராணம், ராமாயணம் போன்றவற்றில் காணப்படுகின்றன.
ஜெயின் தொன்மவியல் மற்றும் புத்த தொன்மவியல் போன்றவற்றின் வேத புராணங்களில் கூட பஹரூச் பற்றிய குறிப்புகள் உள்ளன.



Click it and Unblock the Notifications