பாண்டுபோல் ஹனுமான் கோயில் சரிஸ்கா தேசியப் புலிகள் பாதுகாப்பு சரணாலயத்தில் அமைந்துள்ளது. இது அதிகம் பயணிகளால் விஜயம் செய்யப்படும் ஸ்தலமாகும். பாண்டுபோல் அல்லது பாண்டு வாசல் என்றழைக்கப்படும் இடத்தில் பாறைகளுக்கு மத்தியில் ஒரு நீரூற்றும் சுரந்து வருகிறது.
புராணக்கதைகளின்படி பாண்டவர்கள் வனவாசத்தின்போது இங்கு வசித்ததாக சொல்லப்படுகிறது. மற்றொரு கதையின்படி இங்கு பீமனை ஹனுமான தோற்கடித்ததாகவும் சொல்லப்படுகிறது.
இந்த ஹனுமான் கோயிலில் பிரம்மாண்டமான ஹனுமான் சிலை காட்சியளிக்கிறது. மழைக்காலத்தில் ஒரு நீர்வீழ்ச்சியையும் இந்த ஸ்தலத்தில் பார்க்கலாம். பலவிதமான பறவைகள், லாங்குர் குரங்குகள் மற்றும் மகெக் குரங்குகள் இந்த கோயில் பிரதேசத்திலேயே வசிக்கின்றன.



Click it and Unblock the Notifications