ராஜஸ்தான் மாநிலத்தின் வடமேற்குப்பகுதியில் அல்வர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த சில்செர் ஏரி 7ச.கி.மீ பரப்பளவில் பரந்து காணப்படுகிறது. 1845ம் ஆண்டு மஹாராஜா வினய் சிங் என்பவரால் இது உருவாக்கப்பட்டு அல்வர் நகர நீர்த்தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.
வினய் சிங் மஹாராஜா கட்டியுள்ள ஒரு ஏரி அரண்மனையும் இங்கு உள்ளது. ராஜ ஓய்வு மாளிகை மற்றும் வேட்டை மாளிகையாக இது பயன்படுத்தப்பட்டுள்ளது. தற்சமயம் நவீன வசதிகளுடன் கூடிய ஒரு ஹோட்டலாக இந்த ஏரி அரண்மனை மாற்றப்பட்டுள்ளது. படகுச்சவாரி மற்றும் பாய்மரப்படகு ஓட்டுதல் போன்ற பொழுது போக்கு அம்சங்களும் இங்கு பயணிகளுக்காக காத்திருக்கின்றன.



Click it and Unblock the Notifications