சவாய் மாதோபூர் நகரத்திற்கு அருகிலுள்ள ஆன்மீகத்தலங்களில் இந்த துஷ்மேஷ்வர் மஹாதேவ் கோயிலும் ஒன்றாக புகழ் பெற்றுள்ளது. சவாய் மாதோபூருக்கு அருகிலுள்ள சிவாத் எனும் கிராமத்தில் இது அமைந்துள்ளது.
இங்கு மலையின் மீது கட்டப்பட்டுள்ள ஒரு கோட்டையும் உள்ளது. நகரத்திலிருந்து ஒரு மணி நேரம் பயணம் செய்து இந்த கோயிலை அடைந்தபின்னர் பயண அலுப்பையே மறந்து போகச்செய்யும் அளவுக்கு அற்புதமான கலையம்சத்துடன் இந்தக்கோயில் காட்சியளிக்கிறது.
சிவபெருமானுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்தக்கோயில் ஹிந்து பக்தர்களை அதிக அளவில் கவர்ந்து இழுக்கிறது.
சவாய் மாதோபூர் நகரத்திலிருந்து 40 கி.மீ தூரத்திலுள்ள இந்த சிவாத் கிராமத்திற்கு வாடகை டாக்ஸி அல்லது பேருந்து மூலம் பயணிகள் சென்றடையலாம். இங்கிருந்து 3 கி.மீ தூரத்தில் இசர்தா எனும் ரயில் நிலையமும் உள்ளது.



Click it and Unblock the Notifications