சேனாபதியில் வாழும் மக்களின் நிஜ வாழ்க்கையை காண வேண்டுமானால் மரம் குள்லேன் என்ற கிராமத்திற்கு கண்டிப்பாக செல்ல வேண்டும். இந்த கிராமத்தில் அதிக அளவிலான மக்கள் கூட்டம் காணப்படுகிறது.
மேலும் இவர்கள் மிகவும் பழமையானவர்கள். சேனாபதி நகரத்தில் இருந்து 18 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த கிராமத்தை ஒரு குறுகிய பாதை வழியாக வந்தடையலாம். மணிப்பூரின் வரலாற்றை படிக்க மாநிலம் மற்றும் நாட்டிலுள்ள மக்கள் வளர்ச்சி நூல் அறிஞர்கள் இங்கே வருவதுண்டு.
இந்த கிராமத்தில் வாழும் மக்கள் அவர்களின் பாரம்பரியத்தை தலைமுறை தலைமுறையாக பாதுகாத்து வருகின்றனர். இங்கு சொல்லப்படும் வரலாற்றுக் கதைகள் இந்த பூமியில் காலம் காலமாக வாழ்ந்த மக்களைப் பற்றியும் பல வகையான சமுதயாத்தைப் பற்றியும் நமக்கு விளக்கும்.
நினைவிற்கு எட்டாத நாட்களில் இருந்தே இந்த கிராமம் ஊர் தலைவரின் தலைமையில் இயங்குகிறது. ஊர் தலைவருக்கு ஒரு அரசரைப் போன்ற மரியாதை அளிக்கப்படும்.



Click it and Unblock the Notifications