பீம்கார்க் சஞ்சய் சரோவர் அணை சியோனி மாவட்டத்தில் இருந்து சுமார் 43 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த புகழ்பெற்ற அணை வைன்கங்கா நதியின் குறுக்கே சப்பாரா என்கிற இடத்தில் கட்டப்பட்டுள்ளது.
இந்த அணை ஆசியாவிலேயே மிகப் பெரிய மண் அணைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த மண் அணையை உருவாக்கிய பின், பாசன வசதிகள் பெரிய அளவில் விரிவடைந்தன.
சியோனியின் வளர்ந்து வரும் முக்கிய சுற்றுலா தலமாகிய இது பார்வையாளர்களை பெரிதும் ஈர்க்கிறது. இங்கு மிகச் சிறந்த படகோட்டும் வசதிகள் உள்ளன. எனவே சுற்றுலா பயணிகள் இங்கு படகுச் சவாரி செய்து மகிழலாம்.
மேலும் இந்த அணையின் அமைதியான சூழ்நிலை இந்த இடத்தின் கவர்ச்சி மற்றும் அழகுக்கு அழகு சேர்க்கிறது. பீம்கார்க் சஞ்சய் சரோவர் அணை அதனைச் சுற்றியுள்ள இடங்களுக்கு மின்சாரம் வழங்கும் நோக்கோடு கட்டப்பட்டது.
மிகச் சமீபத்தில், இந்த அணையில் மின் உற்பத்தி தொடங்கியது. அது அணையைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications