ஷேக்ஹாவதி பிரதேசத்திலுள்ள மற்றொரு முக்கிய இடமான இந்த பாகர் நகரம் வண்ணமயமான ஹவேலிகளுக்கு பிரசித்தி பெற்றுள்ளது. இங்குள்ள எல்லா ஹவேலிகளும் 20ம் நூற்றாண்டில் ஷேக்ஹாவதி பகுதியின் மார்வாரி வணிகர்களால் கட்டப்பட்டுள்ளன. இவற்றில் சில ஹவேலிகள் நிஜத்தங்கப்பூச்சு செய்யப்பட்டிருப்பது ஒரு ஆச்சரியமான அம்சமாகும்.
ருங்க்டா மற்றும் பிரமள் மக்காரியா குடும்பத்தார்க்கு சொந்தமான இரண்டு ஹவேலிகள் தற்சமயம் பாரம்பரிய ஹோட்டல்களாக மாற்றப்பட்டு மிக பிரசித்தமான சுற்றுலா அம்சங்களாக பெயர் பெற்றுள்ளன. ஃபதேஹ்சாகர் நீர்த்தேக்கம், மியா சாஹேப் தர்கா மற்றும் ஒயிட் கேட் ஆகியனவும் பாகர் நகரில் உள்ள மற்றைய குறிப்பிடத்தக்க விசேஷ ஸ்தலங்களாகும்.



Click it and Unblock the Notifications