ஃபதேஹ்பூர் நகரம் ராஜஸ்தானின் சிக்கார் மாவட்டத்தில் ஜெய்ப்பூருக்கும் பிக்கானேருக்கும் இடையே நெடுஞ்சாலை எண் 11ல் அமைந்துள்ளது. இது 15ம் நூற்றாண்டைச்சேர்ந்த ஃபதேஹ்கான் எனும் கயாம்கானி வம்ச நவாப் ஒருவரால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
ஃபதேஹ்பூர் நகரமும் அற்புதமாக அலங்கரிக்கப்பட்ட ஹவேலிகளுக்கு பிரசித்தி பெற்றுள்ளது.இங்குள்ள கோயங்கா ஹவேலி 1865ம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. இந்த ஹவேலியில் உள்ள எண்ணற்ற சுவர் ஓவியங்கள் குறிப்பிடத்தக்க புகழை பார்வையாளர்களிடையே பெற்றுள்ளன.
இதன் மேற்கூரையில் காணப்படும் ஓவியம் அவசியம் பார்க்கவேண்டிய அற்புத கலையம்சமாகும். இது தவிர நந்த் லால் தேவ்ரா, சராவ்ஜி மற்றும் சிங்கானியா போன்ற ஹவேலிகளும் இங்கு வரலாற்று முக்கியத்துவம் கொண்டவையாக அறியப்படுகின்றன.



Click it and Unblock the Notifications