மாட்ஃப்ரான் யுத்த நினைவகம் முதல் உலகப்போரில் காசிக்களின் பங்கை கவுரவிக்கும் விதமாக ஆங்கிலேயர்களால கட்டப்பட்டது. ஈத்வா பஜார் என்றும் பாரா பஜார் என்றும் இவ்விடத்தைச் சுற்றி சந்தைகள் இருக்கின்றன.
உள்ளூர் மையமாக திகழ்வதுடன் ஷில்லாங்கின் பிரதான சுற்றுலா தளமாகவும் மாட்ஃப்ரான் விளங்குகிறது. ஃப்ரான்சின் கல் என்ற பொருள் தரும் மாட்ஃப்ரான் ஆங்கிலேயர்களுக்காக ஆயுதங்கள், ரவைகள் மற்றும் பிற முக்கியப் பொருட்களைச் சுமந்து சென்று இறந்த 67 காசிக்களுக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
லத்தீன் மொழியில் ‘Dulce et decorum est pro patria mori’ 'எழுதப்பட்டுள்ள குறிப்பின் அர்த்தமாவது 'ஒருவர் நாட்டுக்காக தன் உயிரைக் கொடுப்பது இனிமையான மரணம் என்பதாகும்.



Click it and Unblock the Notifications