பனிமூடிய மலைச்சிகரங்களையும், பள்ளத்தாக்குகளையும், சிம்லா நகரத்தையும் அற்புதமாக காணச்செய்யும் ஜக்கு கோவிலானது, ஜக்கு ஹில்டாப்பில், கடல் மட்டத்திலிருந்து 8048 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
அனுமனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோவில் ரிட்ஜ்க்கு அருகே அமைந்துள்ளது. வியத்தகு சூரிய உதய மற்றும் அஸ்தமன காட்சிகளை பார்வையாளர்கள் இங்கிருந்து கண்டு மகிழ முடியும்.
இந்த கோவில் வளாகம் பல்வேறு வகைக்குரங்குகளின் வசிப்பிடமாக விளங்குகிறது. அரசாங்கம் இந்த மலையில் பல்வேறு வகையான மலையேற்றப்பயிற்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
மலையேற்றப்பாதையானது கண்கவர் பைன் மரக்காடுகளால் சூழப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் மட்டக்குதிரையை வாடகைக்கு எடுத்தும் இந்தக்கோவிலை அடைய முடியும். ஜக்கு ஹில்லின் மலையடிவாரத்தில் அமைந்துள்ள பல கடைகள் மலையேறுபவர்களுக்கு உதவ நடைபயிற்சி கழிகளை (walking stick) வழங்குகின்றன.



Click it and Unblock the Notifications