இமாச்சலப்பிரதேசத்தின் கலாச்சாரம் மற்றும் பலவகையான தாவர மற்றும் வன உயிரினங்கள் இணைந்து வாழும் இயற்கை சூழலை (flora and fauna) அறிந்து கொள்ள உதவும் சிறந்த இடமாக உள்ளது.
மேலும் பார்வையாளர்களைக்கவரும் புகழ்பெற்ற புகைப்பட கலைக்கூடமாக இது விளங்குகிறது. புகழ்பெற்ற புகைப்பட வல்லுநரான இந்தர் பால் அவர்களால் எடுக்கப்பட்ட சுமார் இருபதாயிரத்திற்கும் மேற்ப்பட்ட புகைப்படங்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
பார்வையாளர்கள் இந்த கலைக்கூடத்தில் இயற்கைக்காட்சிகள் மற்றும் சுற்றுலா தொடர்புடைய பல்வேறு புகைப்படங்களை காணலாம். இங்கு புகைப்படம் எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது, ஆனால் பிளாஷ் லைட்டை பயன்படுத்துவது கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளது.
பார்வையாளர்கள் வார நாட்களில் காலை 9.00 மணியிலிருந்து மாலை 5.00 மணி வரையிலும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் காலை 9.00 முதல் மாலை 6.30 மணி இங்கு அனுமதிக்கப்படுவர்.



Click it and Unblock the Notifications