சாக்ரெட் ஹார்ட் கதீட்ரல் எனும் இந்த தேவாலயம் ஷிமோகா நகரத்தில் அதன் கட்டிடக்கலை அம்சத்துக்காக பெரிதும் பார்வையாளர்களால் ரசிக்கப்படுகிறது. இது நாட்டிலேயே இரண்டாவது பெரிய தேவாலயம் எனும் அந்தஸ்தையும் பெற்றிருக்கிறது.
இந்த தேவாலயத்தில் பிரதானக்கூடமானது பிரம்மாண்டமாக 18000 ச.அடி பரப்பில் அமைக்கப்பட்டிருக்கிறது. பிரமிக்க வைக்கும் ரோமன் கிராஃபிக் கட்டிடக்கலை பாணியில் இந்த கதீட்ரல் எழுப்பப்பட்டுள்ளது.
ஏசு கிறிஸ்துவின் ஒரு பெரிய சிலை ஒன்றையும் இங்கு பார்க்கலாம். இதன் பிரதானக்கூடத்தில் ஒரே சமயத்தில் 5000 பேர் அமர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மங்களூர் விமானநிலையம் ஷிமோகாவிற்கு அருகில் உள்ளது. ஷிமோகா நகரின் ரயில் நிலையம் பெங்களூர், மைசூர் உள்ளிட்ட கர்நாடக மாநிலத்தின் முக்கிய நகரங்களுக்கு இணைப்புச்சேவைகளை கொண்டுள்ளது.
ஷிமோகாவில் பி.எச் சாலை எனும் இடத்தில் உள்ள இந்த சாக்ரெட் ஹார்ட் கதீட்ரல் தேவாலயத்துக்கு பேருந்து மூலமாக அல்லது ஆட்டோ மூலமாக பயணிகள் சென்றடையலாம்.



Click it and Unblock the Notifications