தாரா தேவி கோயில் சிம்லாவிலிருந்து 11 கி.மீ தூரத்தில் உள்ளது. இது ஷோகி பகுதியில் உள்ள முக்கியமான ஆன்மீகத்தலங்களில் ஒன்றாகும். தாராதேவிக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள இக்கோயில் தாரா பர்வதம் எனும் மலையின்மீது அமைந்துள்ளது.
திபெத்திய பௌத்த மரபினர் முக்கியமாக வணங்கும் இந்த தெய்வம் பெண் சக்திக்கடவுளான துர்க்கையின் ஒன்பது அவதாரங்களுள் ஒன்றாக கருதப்படுகிறது.
250 வருடங்கள் பழமையான இக்கோயிலின் விக்கிரகம் சேன் ராஜ வம்சத்தினரால் மேற்கு வங்காளத்திலிருந்து கொண்டு வரப்பட்டதாக சொல்லப்படுகிறது.
வைணவ மரபுப்படி இந்த மரத்தால் ஆன விக்கிரகம் நிறுவப்பட்டிருக்கிறது. ஷரத் நவராத்திரி திருவிழாவின்போது இக்கோயிலில் விசேஷ பூஜைகள் கோலாகலமாக நடத்தப்படுகின்றன.



Click it and Unblock the Notifications