சில்சாருக்கு தெற்கே சுமார் 40 கீ. மீ. தொலைவில் அமைந்துள்ள பூபன் மகாதேவ் கோவில் ஒரு புகழ்பெற்ற சிவாலயம் ஆகும். இது இடைக்காலத்தை சேர்ந்தது என வரலாற்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
புவன் மலை மீது அமைந்துள்ள இந்த கோவில் காச்சரி அரசர் `லட்சுமி சந்திரா' வால் கட்டப்பட்டது. இந்த கோவிலில் கருங்கல்லால் ஆன சிவன் மற்றும் பார்வதியின் சிலைகள் உள்ளன.
இந்த கோவிலின் கட்டடக் கலை தனித்தன்மை வாய்ந்தது. இந்த கட்டடக் கலையை காச்சரி பேரரசின் பல்வேறு இடங்களிலும் நாம் காணலாம். இந்த கோவில் காச்சரி கட்டிடக்கலையின் சிறப்பை பிரதிபலிக்கிறது.
இந்த கோவிலில் கொண்டாடப்படும் சிவராத்திர் திருவிழா மிகவும் புகழ் பெற்றது. அந்த சிவராத்திரி விழாவின் போது நாடு முழுவதும் இருந்து பெரும் எண்ணிக்கையில் பக்தர்கள் இந்த கோவிலில் திரளுகின்றார்கள்.
மலையடிவாரத்தில் இருந்து இந்த கோவில் வரை ட்ரெக்கிங் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு அமைதியான மற்றும் ஆனத்தமான அனுபவம் கிடைக்கிறது. புவன் மலை பார்வையாளர்களுக்கு அதனைச் சுற்றியுள்ள இடங்களின் அழகிய காட்சிகளை ஒரு பறவையின் கண்ணோட்டத்தில் வழங்குகிறது.



Click it and Unblock the Notifications