சாலை மூலம் எளிதில் அனுகக் கூடிய `மைபோங்க்' ஒரு பிரபலமான மலைவாசஸ்தலம் ஆகும். இது சில்சாரில் இருந்து சுமார் 137 கி.மீ. தொலைவில் உள்ளது.
இந்த பெயருக்கு டிமாச மொழியில் `நிறைய அரிசி' எனப் பொருள். `மஹுர்' ஆற்றின் கரையில் அமைந்துள்ள மைபோங்க் பண்டைய காலத்தில் டிமாச மற்றும் காச்சரி ராஜ்ஜியத்தின் தலைநகராக விளங்கியது.
இந்த மலை வாசஸ்தலத்திற்கு ஒரு முறை ட்ரெக்கிங் சென்று வருவதன் மூலம் நீங்கள் புத்துணர்ச்சியை உணர்வீர்கள். அப்பொழுது பண்டைய ராஜ்ஜியங்களின் எச்சங்களையும் நீங்கள் கண்டு மகிழலாம்.
மைபோங்கின் தெற்கில் உள்ள கச்சரி அரசின் அழிந்த பழைய நகரம் உள்ளது. அது சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்கிறது. நீங்கள் இங்கு `லோங்க்தைனி நோஹ் கோவில்' மற்றும் `ராம்சன்டி கோவில்' போன்ற 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இரு கோவில்களை காணலாம்.
இந்த இரண்டு கோவில்களும் இரண்டு கூரைகள் கொண்ட ஒற்றை கோவில் ஆகும். இவற்றைத் தவிர, இங்கு உள்ள ஒரு சில நீர்வீழ்ச்சிகள் மைபோங்கிற்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்கிறது.