Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சில்வாஸா » ஈர்க்கும் இடங்கள் » மதுபன் அணை

மதுபன் அணை, சில்வாஸா

22

தாமினிகங்கா ஆற்றின் பாதையில் இந்த மதுபன் அணை கட்டப்பட்டிருக்கிறது. இது குஜராத் மற்றும் தாத்ரா &  நகர் ஹவேலி யூனியன் பிரதேசம் ஆகிய இரண்டு அரசாங்கங்களின் கூட்டு முயற்சியில் கட்டப்பட்டிருக்கிறது.

இந்த அணைக்கட்டுமானம் காரணமாக துதனி எனும் இடத்தில் ஒரு பெரிய நீர்த்தேக்கம் உருவாகியுள்ளது. இந்த இடம் சில்வாசாவிலிருந்து சுமார் 40 கி.மீ தூரத்தில் உள்ளது.

துதனி நீர்த்தேக்க பகுதியில் சுற்றுலாப்பயணிகளுக்கான பல்வேறு நீர் விளையாட்டு பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன. அதிவேக மோட்டார் படகு, வாட்டர் ஸ்கூட்டர், அக்வா பைக், கேனோ படகுகள், கயாக் படகுகள், பயணிகள் படகுகள் மற்றும் பம்பர் படகுகள் போன்ற பலவகையான நீர்ச்சவாரி வசதிகள் இங்கு கிடைக்கின்றன.

துதனி மற்றும் கௌச்சா என்ற இரண்டு இடங்களில் உள்ள ‘வாட்டர் ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ்’ வளாகங்களில் மாநில அரசாங்கத்தின் சுற்றுலாத்துறை மூலம் இந்த வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. மேலும் சுற்றியுள்ள இயற்கை எழிற்காட்சிகளை பார்த்து ரசிப்பதற்கும் இந்த நீர்த்தேக்க ஸ்தலங்கள் ஏற்றவையாக உள்ளன.

இங்கு சுற்றுலாப்பயணிகள் நவீன வசதிகள் கொண்ட கூடாரங்களில் தங்கி ஓய்வெடுத்து அணைப்பகுதியின் அழகை ரசிக்கலாம்.

கேம்பிங் கிச்சன் எனப்படும் அமைப்புகள் மூலம் உணவுகளும் அவர்களுக்கு பரிமாறப்படுகின்றன. திறந்த வெளியில் வித்தியாசமான சூழலில் அவர்கள் உணவை ருசிக்கும் அனுபவத்தை பெறலாம். அணைப்பகுதிக்கு அருகிலேயே இது போன்ற பல பிக்னிக் ஸ்தலங்கள் அமைந்துள்ளன.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
07 Sep,Mon
Check Out
08 Sep,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue