காலை 8.00 மணிமுதல் 1.30 மணி வரையிலும் பின்னர் மாலை 5.00 மணிமுதல் 7.00 மணிவரையிலும் இக்கோவில் திறந்திருக்கும். ருக்மணி , சத்யபாமா சமேத கோபாலகிருஷ்ணபெருமாள் இங்கு அருள்பாலிக்கிறார்.
ருக்மணி , சத்யபாமா சகிதமாக கோபாலகிருஷ்ணபெருமாள் காட்சியளிப்பதால் துவாரகையைப்போல் புனிதமானது என்றும் இங்கு பெருமாளை தரிசனம் செய்வது துவாரகைக்குச் சென்று கிருஷ்ணனை வழிபடுவதற்கு ஈடானது என்றும் பக்தர்கள் நம்புகின்றனர்.
புராணக்கதைகளின்படி, ஒருமுறை தமது மனைவி சத்யபாமாவுக்காக, பகவான் ஸ்ரீகிருஷ்ணர், பாரிஜாத மலர்களை தேடிவந்தாராம். இங்குள்ள தடாகத்தில் சென்று தேடும்படி, சிவபெருமான் அவருக்கு அறிவுறுத்தினாராம்.
அத்தடாகத்தில் முழுவதும் பாரிஜாதம் என்னும் மந்திரசக்தி பொருந்தியமலர்கள் பூத்திருந்தனவாம். இதனால், இக்கோவில் தாடமலர்ப்பொய்கை என அழைக்கப்படுகிறது. 12 ஆழ்வார்களால் பாடப்பட்ட 108 திவ்யதேசங்களில் இக்கோவிலும் ஒன்று.



Click it and Unblock the Notifications