Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சிர்ஸா » ஈர்க்கும் இடங்கள் » தேரா பாபா சர்சாய் நாத்

தேரா பாபா சர்சாய் நாத், சிர்ஸா

13

நாத் பிரிவினர் அவர்கள் சிவ பெருமானின் மீது கொண்டுள்ள பக்திக்காக அறியப்படுபவர்களாவர். அவர்கள் தங்கியிருந்த இடங்களில் தேரா என்ற வசிப்பிடங்களை மற்றும் கோவில்களை கட்டினார்கள்.

அந்த வகையில் அவர்கள் 13-ம் நூற்றாண்டில் கோவில் கட்டிய இடம் தான் சிர்ஸாவில் உள்ள  ஹிஸார் கேட் ஆகும். இந்த கோவிலை நாத் பிரிவினரின் முதன்மையான குருவாக இருந்த சர்சாய் நாத் என்பவரும், அவரைப் பின்பற்றி வந்தவர்களும் கட்டி, இங்கே சடங்குகளையும் மற்றும் தியானமும் செய்து வந்தனர்.

போஜ கல்வெட்டுகளின் படி சிர்ஸாவில், பசுபதி பிரிவைச் சேர்ந்த நீலகண்டர் என்ற துறவியும் யோகீஸ்வரர் அல்லது சிவபெருமானுக்கன ஒரு கோவிலை சுட்ட செங்கற்கள் மற்றும் கனமான கற்பலகைகளைப் பயன்படுத்தி 8-வது அல்லது 9-வது நூற்றாண்டில் கட்டியுள்ளார்.

இந்த கோவிலின் உச்சியில் தங்க சிக்காரா அல்லது சுருள் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த கோவில் இருந்த அடையாளமே இல்லாது போனதால் பாபா சர்சாய் நாத் இதனை மீண்டும் கட்டினார்.

முகலாய பேரரசர் ஷா ஜகான் தன்னுடைய நோய்வாய்ப்பட்ட மகன் குணமடைய வேண்டும் பொருட்டாக இந்த தேரா பாபா சர்சாய் நாத்திற்கு வந்துள்ளார் என்று நமபப்படுகிறது.

மேலும், அவர் தானமாக வழங்கிய இடத்தில் ஒரு குவி மாடமும் கட்டப்பட்டுள்ளது. தேரா நிர்வாகத்திடம் உள்ள ஒரு அரபி ஆவணத்தில் அரசர் வந்து சென்றதற்கான குறிப்புகள் உள்ளன. சிவபெருமானுக்கான கோவிலுடன், துர்கா மாதாவிற்கும் ஒரு கோவிலை தேராவில் காண முடியும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue