விருதுநகர் மாவட்டம் சாத்தூருக்கு 9 கிமீ தொலைவில் நென்மேனி கிராமம் அமைந்துள்ளது. வைப்பாறு என்ற ஆற்றின் கரையில் அமைந்திருப்பது இந்த நென்மேனி கிராமத்தின் சிறப்பாகும்.
ஒரு காலத்தில் இந்த பகுதியில் நெல் அமோகமாக விளைந்ததால் இந்த பகுதி முதலில் நெல்மணி என்று அழைக்கப்பட்டது. பின் காலப்போக்கில் மருவி இப்போது நென்மேனி என்று அழைக்கப்படுகிறது.
இங்கு இருக்கும் அரசு பாசன நீர் குளத்தை தேடி ஏராளமான பறவைகள் குளிர்காலத்தில் வருகின்றன. மேலும் இந்த குளம் முழுமையாக நிரம்பி இருக்கும் போது ஏராளமான வெளிநாட்டுப் பறவைகள் இங்கு வரும்.
அந்த பறவைகளை பார்ப்பதற்கு ரம்மியமாக இருக்கும். எனவே பறவை பிரியர்கள் குளிர்காலத்தில் நென்மேனிக்கு வந்தால் விதவிதமான பறவைகளை கண்டு களிக்கலாம்.



Click it and Unblock the Notifications