சிவகாசிக்கு மிக அருகில் இருக்கும் இன்னுமொரு முக்கிய சுற்றுலாத் தலம் பிளவக்கல் அணையாகும். இந்த அணை மதுரையிலிருந்து 90 கிமீ தொலைவிலும், விருதுநகரிலிருந்து 59 கிமீ தொலைவிலும் அமைந்திருக்கிறது.
இந்த அணையில் ஒரு சிறுவர் பொழுதுபோக்கு பூங்கா இருப்பதால், இந்த பூங்காவில் சிறார்கள் ஆசை தீர விளையாடி மகிழலாம். இந்த பிளவக்கல் அணை கோவிலார் அணை மற்றும் பெரியார் அணை என்ற இரண்டு பிரிவுகளை கொண்டது.
கோவிலார் அணை 133 அடி நீர்தேக்க கொள்ளளவையும், பெரியார் அணை 193 அடி நீர்த்தேக்க கொள்ளளவையும் கொண்டிருக்கின்றன. அக்டோபர் முதல் டிசம்பர் வரையுள்ள மாதங்களில் இந்த அணைகள் முழுவதுமாக நிரம்பியிருக்கும்.



Click it and Unblock the Notifications