சோனமார்க்கின் மிக முக்கிய சுற்றுலாத் தலம் கத்சர் ஏரி ஆகும். மலர்களின் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும் இந்த கத்சர் ஏரி கடல் மட்டத்திலிருந்து 5000 மீ உயரத்தில் அமைந்திருக்கிறது.
சோனமார்க்கிலிருந்து 28 கிமீ தொலைவில் இந்த ஏரி அமையப்பெற்றுள்ளது. இமய மலையின் நடுவில் மிக அழகாக அமைந்திருக்கும் இந்த ஏரி இப்பகுதிகளில் மிக உயரத்தில் இருக்கும் ஏரிகளில் ஒன்றாக இருக்கிறது.
கத்சர் என்றால் காஷ்மீரிய மொழியில் மீன்களின் ஏரி என்று பொருள். இந்த ஏரி 0.85 கிமீ நீளமும், 0.76 கிமீ அகலுமும் கொண்டது. இந்த ஏரியை சுற்றிலும் ஆல்பின் மலர்கள் அலங்கரிக்கின்றன.
நவம்பர் முதல் ஏப்ரல் வரை இந்த ஏரி பனியால் உறைந்து இருக்கும். மற்ற காலங்களில் இந்த ஏரியில் தண்ணீர் கரையை தழும்பி நிற்கும். மீன் பிடிப்பதில் ஆர்வமுள்ள சுற்றுலா பயணிகள் இந்த ஏரியில் மீன் பிடித்து மகிழலாம்.



Click it and Unblock the Notifications