சிரவணபெலகொலாவுக்கு வருகை தரும் பயணிகள் இந்த காளம்மா கோயிலுக்கும் விஜயம் செய்வது நன்று. இது காளி தேவிக்காக உருவாக்கப்பட்டுள்ள கோயிலாகும்.
சிரவணபெலகொலா ஸ்தலத்திலுள்ள ஒரே இந்துக்கோயில் இந்த காளம்மா கோயில் என்பது குறிப்பிடத்தக்க விசேஷம் ஆகும். இது அக்கனபசாதி கோயிலுக்கருகில் அமைந்துள்ளது.
காளம்மா கோயிலுக்கு வருகை தரும் பயணிகள் இங்கு நான்கு கரங்களுடன் காட்சியளிக்கும் காளி தேவியின் சிலையை பார்க்கலாம்.
இந்த கோயில் வளாகத்துக்குள்ளேயே அமைந்துள்ள வேறு பல சிறு சன்னதிகளையும் சுற்றிப்பார்க்கலாம். இந்த சிறு சன்னதிகள் இதர இந்து கடவுளர்களின் சிலைகளை கொண்டுள்ளன. காளம்மா கோயில் இந்துக்கள் ஜைனர்கள் என்ற இரு சமூகத்தினராலும் விரும்பி தரிசிக்கப் படுகிறது.



Click it and Unblock the Notifications