புகழ் பெற்ற சூஃபி துறவியான மஹ்தூம் சாஹிப் அல்லது ஹஸ்ரத் சுல்தானிற்காக கட்டப்பட்டுள்ள மிகவும் புனிதமான வழிபாட்டுத்தலமாக மஹ்தூம் சாஹிப் உள்ளது. ஹரி பர்பத் கோட்டையின் தெற்கு பகுதியில் இரண்டு அடுக்குளில் அமைந்துள்ள இந்த தலம் முகலாய கட்டிடகலையை பிரதிபலிப்பதாக உள்ளது.
மக்களின் நம்பிக்கைப்படி, மஹ்தூப் சாஹிப்பிற்கு தெய்வீக சக்திகள் பல உண்டு. எனவே தான், பல்வேறு பிரிவுகளைச் சேர்நதவர்களும், மதம் மற்றும் இனப்பாகுபாடுக ளை கடந்து இங்கு வந்து இவருடைய அருளை பெற்றுச் செல்கிறார்கள். மஹ்தூம் சாஹிப் வழிபாட்டுத்தலம் வருடம் முழுவதுமே மக்களின் வருகைக்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.



Click it and Unblock the Notifications