கடல் மட்டத்திலிருந்து 2697 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள கரிகட்டா கோயில் பயணிகள் பார்க்க வேண்டிய ஒரு சுற்றுலா ஸ்தலமாகும். இது வைகுண்ட சீனிவாசா எனப்படும் விஷ்ணு பகவானுக்கான கோயிலாகும்.
விஷ்ணு தெய்வத்தின் 6 அடி உயர கறுப்புச்சிலை இங்குள்ளது. இந்தச்சிலை பிருகு முனிவரால் ஸ்தாபிக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது. இந்தக்கோயிலின் மையத்தில் விஷ்ணு சிலையும் மேற்குப்பகுதியில் கருவறையில் பத்மாவதியின் சிலையும் காணப்படுகிறது.பயணிகள் இக்கோயிலில் கருடச்சிலை மற்றும் விஷ்ணு பாதச்சுவடு சிலை போன்றவற்றையும் காணலாம். ஒரு பிரம்மாண்டமான கல்யாண மண்டபமும் கோயில் முற்றத்துடன் இணைந்துள்ளது. இங்கு திருமணம் செய்வித்தால் மணமக்களுக்கு சுபிட்சம் என்பது ஐதீகம்.
இந்த கோயிலிலிருந்து பார்த்தால் ஷீரங்கப்பட்டணா கோட்டை, மைசூர் பகுதி, காவேரி மற்றும் லோகபவானி ஆறுகள் சேரும் இடம் ஆகியவை உச்சியிலிருந்து அழகாக தெரிகின்றன. பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தின் போது நடக்கும் தேர்த்திருவிழாவின்போது இந்த கோயிலுக்கு விஜயம் செய்வது சிறந்தது.



Click it and Unblock the Notifications