சற்று உயரமான இடத்தில், செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு மலையில், அமைந்துள்ள ஆன்மீகத்தலம் இதுவாகும். நெடுங்காலமாக இந்துக்களால் நம்பப்பட்டு வரும் மனிதனின் சராசரி ஆயுள் காலமான 60 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில், தரையிலிருந்து கோவிலுக்குச் செல்ல 60 படிக்கட்டுகள் கொண்ட பாதை அமைந்துள்ளது.
இக்கோவில் மூன்று தளங்களைகொண்டது. மேல் தளங்களுக்குச் செல்லச் செல்ல உயரமான குறுகலான படிக்கட்டுகளைக் கடக்கவேண்டியுள்ளது. முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்ய விரும்புபவர்கள் கோவிலின் கருவறைக்குள் அழைத்துச் செல்லப்பட்டு தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.
இந்த அபிஷேகம் என்னும் பூஜை சுமார் 60 நிமிடங்கள் நீடிக்கும். அபிஷேகத்தின் போது, சுவாமிக்கு, பல்வேறு வகையான நைவேத்தியங்கள் படைக்கப்பட்டு, போற்றிப் பாடல்கள் பாடப்படுகின்றன.
கோவிலின் நடுப்பகுதியானது பக்தர்கள் வலம் வரும் பிரகாரமாகும். கீழ்ப்பகுதியில் சிவபெருமானின் ஆலயம் உள்ளது. தங்கும் வசதியும் உணவும் ஆலய நிர்வாகத்தால் அளிக்கப்படுகின்றன. அல்லது பக்தர்கள் விரும்பினால், கோவிலைச்சுற்றியுள்ள ஏராளமான உணவகங்களில் உணவு எடுத்துக் கொள்ளலாம்.



Click it and Unblock the Notifications