சலிக்குளம் என்ற ஊரில் அமைந்துள்ள 'கட்டபொம்மன் நினைவுக் கோட்டை' என்று அழைக்கப்படும் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை ஒரு புகழ் பெற்ற வரலாற்று ஸ்தலமாகும்.
18ம் நூற்றாண்டைச் சேர்ந்த , மதுரை நாயக்கர் அரசின் பாலயக்காரராக விளங்கிய, பாஞ்சாலங்குறிச்சி மன்னன் வீர பாண்டிய கட்டபொம்மனால் இக்கோட்டை கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தக் கோட்டைக்கும் சுதந்திரப் போரட்டத்திற்கும் தொடர்பு உள்ளது. 1799ல், மன்னன் வீர பாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்ட போரின் போது, ஆங்கில அரசு இந்தக் கோட்டையை கைப்பற்றியது. பின்னர், அவரது சகோதரர், ஆங்கில அரசிடமிருந்து இந்தக் கோட்டையை மீட்டார்.
சுதந்திரத்திற்குப் பின், இந்திய தொல்பொருள் ஆய்வகம், இந்தக் கோட்டையை நிர்வகித்து வருகிறது. 1974ல், தமிழக அரசு, பாஞ்சாலங்குறிச்சி கோட்டையின் நினைவாக ஒரு புதிய கோட்டையை கட்டி, அதற்கு 'கட்டபொம்மன் நினைவுக் கோட்டை' எனப் பெயரிட்டது.
இங்கு, கட்டபொம்மனின் குலதெய்வமான ஜக்கம்மா தேவிக்கு ஒரு சிறு கோவில் உள்ளது. வரலாற்றில் ஆர்வம் உள்ளவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம் இது.



Click it and Unblock the Notifications