Search
  • Follow NativePlanet
Share

திருத்தணி - அழகன் முருகனின் ஆனந்தச் சிரிப்பு!

4

தமிழ் கடவுளான முருக பெருமானின் அறுபடை வீடுகளில் திருத்தணியும் ஒன்று. இந்துக் கடவுளான முருகன் வாசம் செய்யும் இந்த திருத்தணி தமிழ்நாட்டில் உள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது.

திருத்தணியின் மிக முக்கிய அம்சம் என்னவென்றால் இங்கு அமைந்திருக்கும் திரு சுப்பிரமணியசுவாமி ஆலயம் ஆகும். இந்த ஆலயத்திற்கு ஆண்டு முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள். மேலும் சுற்றலா வருவோருக்கு விருந்தாக இங்கு பாயும் நந்தி ஆறும் இருக்கிறது.

குமர தீர்த்தா அதாவது சரவண பொய்கை என்று அழைக்கப்படும் புனித தீர்த்த குளமும் திருத்தணியில் அமைந்துள்ளது. இந்த சரவண பொய்கை ஏராளமான சக்திகளை தன்னுள் கொண்டிருக்கிறது என்று முருக பக்தர்கள் நம்புகின்றனர். முருகப் பெருமான் தீய எதிரிகளுக்கு எதிராக போரிட்டு வென்ற ஆறு இடங்களில் ஒரு இடமாக திருத்தணி நம்பப்படுகிறது.

முருகனின் மற்ற ஐந்து புனித தலங்களாக பழனியில் அமைந்திருக்கும் தண்டாயுதபாணி ஆலயம், திருச்செந்தூரில் அமைந்திருக்கும் செந்தில் ஆண்டவர் ஆலயம், திருப்பரங்குன்றத்தில் இருக்கும் சுப்பிரமணிய சுவாமி ஆலயம், சுவாமி மலையில் அமைந்திருக்கும் சுவாமிநாத சுவாமி ஆலயம் மற்றும் பழமுதிர் சோலையில் அமைந்திருக்கும் சுப்பிரமணிய சுவாமி ஆலயம் போன்றவை உள்ளன.

இந்த ஆறு புண்ணிய தலங்களுக்கும் சென்று வேண்டி வந்தால் இறைவன் சுப்பிரமணிய சுவாமியின் அபரிவிதமான அருளைப் பெறலாம் என்று நம்பப்படுகிறது.

திருத்தணியில் சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தைத் தவிர்த்து சந்தன வேணுகோபாலபுரம் ஆலயமும் கண்டிப்பாக பார்க்க வேண்டியது. இந்த ஆலயத்திற்கும் ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

திருத்தணி சிறப்பு

திருத்தணி வானிலை

சிறந்த காலநிலை திருத்தணி

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது திருத்தணி

  • சாலை வழியாக
    தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களிலிருந்து திருத்தணிக்கு பேருந்து வசதிகள் உள்ளன. மேலும் திருப்பதி, திருத்தணியிலிருந்து 68 கிமீ தூரமே உள்ளதால் இங்கிருந்து திருப்பதிக்கும் மிக எளிதாக செல்ல முடியும்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    ரயில் மூலம் திருத்தணி செல்வது மிகவும் எளிது. சென்னை அல்லது அரக்கோணம் ரயில் நிலையங்களில் இறங்கி பேருந்துகள் மூலமோ அல்லது வாடகை டாக்ஸிகள் மூலமோ திருத்தணியை மிக எளிதாகச் சென்றடைய முடியும். பேருந்து கட்டணம் மிகக் குறைவாக இருக்கும். அதோடு டாக்ஸி வாடகையும் ரூ.750க்கு அதிகமாக இருக்காது.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    திருத்தணியில் விமான நிலையும் எதுவும் இல்லை. ஆனால் சென்னை விமான நிலையம் திருத்தணிக்கு அருகில் 84 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. எனவே சென்னை விமான நிலையத்தில் இறங்கி, பேருந்துகள் மூலமோ அல்லது வாடகை டாக்ஸிகள் மூலமோ திருத்தணிக்கு மிக எளிதாகச் செல்லலாம். மேலும் பெங்களூரு விமான நிலையம் திருத்தணியிலிருந்து 255 கிமீ தூரத்திலும், ஐதராபாத் விமான நிலையம் 588 கிமீ தூரத்திலும் அமைந்திருக்கின்றன .
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue