Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » திருவனந்தபுரம் » ஈர்க்கும் இடங்கள் » அகஸ்தியர் மலை சிகரம்

அகஸ்தியர் மலை சிகரம், திருவனந்தபுரம்

28

அகஸ்தியர் மலைச்சிகரம் அல்லது அகஸ்தியர் கூடம் என்றழைக்கப்படும் இந்த சிகரம் 1868 மீட்டர் உயரத்தை கொண்டுள்ளது. திருவனந்தபுரம் பகுதியில் இதுவே மிக உயர்ந்த மலைச்சிகரமாகும்.

தாமிரபரணி ஆறு, கரமனா ஆறு மற்றும் நெய்யார் ஆறு போன்றவை இந்த மலையிலிருந்து உற்பத்தியாகின்றன. இது ஹிந்துக்களின் முக்கியமான புனித யாத்திரை ஸ்தலமாகவும் விளங்குகிறது.

இந்த சிகரத்தின் உச்சியில் அகஸ்திய முனிவரின் தத்ரூப சிலையை தரிசிக்கலாம். இப்பகுதி முழுவதும் நிரம்பி வழியும் ரம்மியமான இயற்கைச்சூழல் அவசியம் பார்த்து ரசிக்க வேண்டிய ஒன்றாகும்.

அகஸ்தியர் மலைச்சிகரத்தின் உச்சியை மலையேற்றம் செய்துதான் அடையமுடியும் என்பது குறிப்பிட வேண்டிய ஒரு தகவலாகும். அதுமட்டுமல்லாமல் மலையேற்ற செய்வதற்கு வனத்துறையினரின் அனுமதியையும் பெற வேண்டியுள்ளது. ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் மட்டும்தான் மலையேற்றத்துக்கு அனுமதி வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிகரத்தின் உச்சியிலுள்ள அகஸ்தியர்கோயிலுக்கு விஜயம் செய்யவும் கேரள அரசாங்கத்தின் அனுமதியை பெறவேண்டும். இச்சிகரத்தை நோக்கி பயணிக்கும் வழியில் பலவிதமான மூலிகைச்செடிகளும் மருந்து தாவரங்களும் வளர்ந்துள்ளதை காணலாம். மேலும், ஏராளமான காட்டுயிர் அம்சங்கள் மற்றும் தாவரங்கள் இம்மலைப்பகுதியில் நிறைந்துள்ளன.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 Jul,Fri
Return On
11 Jul,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 Jul,Fri
Check Out
11 Jul,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 Jul,Fri
Return On
11 Jul,Sat