ஒரு காலத்தில் ‘வடகேச்சிர கோவிலாகம்’ என்று அழைக்கப்பட்ட இந்த ஷக்தன் தம்புரான் அரண்மனையானது திரிசூர் நகரத்தை உருவாக்கிய அப்பன் தம்புரான் வாழ்ந்த அரண்மனையாகும்.
கொச்சி ராஜவம்சத்துக்கு சொந்தமாக இருந்த இந்த அரண்மனையை 1795ம் ஆண்டில் ஷக்தன் தம்புரான் கேரள-டச்சு பாணியில் புதுப்பித்துள்ளார். 2005ம் ஆண்டில் இந்த அரண்மனையானது ஒரு அருங்காட்சியகம் போன்று மாற்றப்பட்டுள்ளது.
இங்கு தம்புரான் காலத்திய பல நினைவுப்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. திப்பு சுல்தான் போன்ற பிரபல வரலாற்று ஆளுமைகள் இந்த அரண்மனைக்கு விஜயம் செய்ததற்கான ஆதாரங்களும் இங்கு காணப்படுகின்றன.
இங்குள்ள காட்சிக்கூடத்தில் பல செப்புச்சிலைகள், பளிங்குச்சிலைகள், புராதன நாணயங்கள் மற்றும் கொச்சி ராஜவம்சத்தை சேர்ந்த சில அரிய ஆவணங்கள் போன்றவற்றைப்பார்க்கலாம்.
மேலும், அரண்மனைக்கு வெளியில் உள்ள ஒரு பாரம்பரிய தோட்டப்பூங்காவில் அரிதான கேரளவகை மூலிகைச்செடிகளையும், மரங்களையும் காணலாம்.



Click it and Unblock the Notifications