கீழ்திருப்பதியில் உள்ள அலமேல்மங்காபுரம் எனும் இடத்தில் இந்த அலமேலு மங்கம்மா சன்னதி அமைந்துள்ளது. இந்த ஸ்தலம் திருச்சானூர் என்றும் அழைக்கப்படுகிறது.
வெங்கடேஸ்வரரின் மனைவியான அலமேலு மங்கம்மா அல்லது பத்மாவதி தேவிக்கு இந்த கோயில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. புஷ்கரணி எனும் தீர்த்தக்குளத்தில் இந்த தேவி அவதரித்ததாக சொல்லப்படுகிறது.
இந்த கோயிலுக்கு சென்று நல்ல சாலைகள் மற்றும் போக்குவரத்து வசதிகள் உள்ளன. திருப்பதி வரும் யாத்ரீகர்கள் அலமேலு மங்கம்மாவை தரிசனம் செய்யாமல் திரும்புவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீ பத்மாவதி கோயில் திருமலையிலிருந்து 5 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இது வெங்கடேஸ்வரரின் மனைவியான பத்மாவதி தேவிக்கு தொண்டைமான் சக்கரவர்த்தி காலத்தில் கட்டப்பட்டுள்ள கோயிலாகும்.
ஸ்ரீ வெங்கடேஸ்வரை தரிசிக்க செல்வதற்கு முன்பு இந்த பத்மாவதி தேவியை வணங்க வேண்டும் என்பது ஐதீகமாக பின்பற்றப்படுகிறது. பத்மாவதி தேவியின் பிறப்பு மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரருடனான திருமணம் ஆகிய இரண்டோடு சம்பந்தப்பட்ட ஸ்தலமாக இது அறியப்படுகிறது.
தொண்டமண்டல ஆகாச ராஜாவின் புத்திரியான பிறந்த இந்த தேவி, மன்னர் நிகழ்த்திய யாகத்தின்போது ஒரு தாமரை மலரில் தோன்றியதால் பத்மாவதி என்று அழைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
வற்றாத அன்பும் கருணையும் உடையவள் என்பதால் அலமேலு மங்கா என்ற பெயராலும் இந்த தேவி அழைக்கப்பட்டாராம். பின்னர் பத்மாவதிக்கு தக்க வயது வந்த பிறகு வெங்கடேஸ்வரர் தோன்றி தேவர்கள் வாழ்த்த அவரை மணம் செய்து கொண்டார் என்பது விளங்கி வரும் ஐதீகக்கதையாகும்.



Click it and Unblock the Notifications