திருப்பதியிலிருந்து 42 கி.மீ தூரத்தில் இந்த அவனாக்ஷம்மா கோயில் அமைந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் நவராத்திரி மற்றும் பிரம்மோத்ஸவ திருவிழாக்களின்போது இக்கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
கல்யாண வெங்கடேஸ்வர ஸ்வாமியுடன் சம்பந்தப்பட்ட ஐந்து கோயில்களில் இதுவும் ஒன்று எனும் பெருமையை இது பெற்றுள்ளது. இவற்றில் மற்ற நான்கு கோயில்கள் ஸ்ரீ வீரபத்ரஸ்வாமி கோயில், ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்வாமி கோயில், ஸ்ரீ அகஸ்தீஸ்வர ஸ்வாமி கோயில் மற்றும் ஷீ சக்தி வினாயகர் ஸ்வாமி கோயில் என்பவையாகும்.



Click it and Unblock the Notifications