திருப்பதியில் உள்ள முக்கியமான கோயில்களில் இந்த கோவிந்தராஜா கோயிலும் ஒன்றாகும். இது பாரம்பரியமான வைணவ கோயிற்கலை மரபுப்படி நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.
1235ம் ஆண்டில் வைணவ குருவான ராமானுஜர் இந்த கோயிலுக்கான அடிக்கல்லை நாட்டியதாக சொல்லப்படுகிறது. கோபுரத்துடன் காட்சியளிக்கும் இந்த கோயிலின் வளாகத்தில் தனித்தனியான இரண்டு கோயில்கள் காணப்படுகின்றன.
இவற்றில் தென்கோடியில் உள்ள கோயிலில் பார்த்தசாரதிக்கடவுளும், வடகோடியில் உள்ள கோயிலில் கோவிந்தராஜக்கடவுளும் வீற்றுள்ளனர். ஸ்ரீ மணவாள மாமுனி, ஸ்ரீ சக்கரத்தாழ்வார், சாலை நாச்சியார் அம்மவாரி, மதுரகவி ஆழ்வார் மற்றும் ஸ்ரீ வைசியராஜ ஆஞ்சநேயஸ்வாமி, ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் மற்றும் வேதாந்த தேசிகர் போன்றோருக்கான சிறு சன்னதிகளும் இக்கோயிலில் இடம் பெற்றுள்ளன.
இவர்கள் அனைவருமே தமிழ் மண்ணில் வாழ்ந்த – ஆழ்வார்கள் என்ற அழைக்கப்பட்ட தீவிர வைணவ மார்க்க சமயப்புலவர்கள் ஆவர்.



Click it and Unblock the Notifications