திருப்பதி மற்றும் திருமலாவுக்கு அருகில் சிவனுக்காக உருவாக்கப்பட்டிருக்கும் கோயில் அமைந்துள்ள ஸ்தலமே கபில தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. திருமலை அடிவாரப்பகுதியில் மலைக்குகை வாசலுடன் காணப்படும் பிரம்மாண்ட கோயிலாக இது காட்சியளிக்கிறது.
இந்த கோயிலின் வாசற்பகுதியில் சிவனின் வாகனமான நந்தியின் சிலை வீற்றுள்ளது. கபில மஹரிஷி இந்த கோயிலில் சிவபெருமான துதித்து தவம் இருந்ததாக சொல்லப்படுகிறது.
அதனாலேயே இந்த கோயிலுக்கு கபில தீர்த்தம் என்ற பெயர் வந்துள்ளது. வினாசனம் எனும் நீர்வீழ்ச்சியின் மூலம் கோயிலுக்கு அருகிலேயே ஒரு தீர்த்தக்குளமும் உருவாகியுள்ளது.
ஒரு காலத்தில் மிகப்பிரசித்தமான கோயிலாக விளங்கிய இந்த புராதனக்கோயில் 13 – 16 ம் நூற்றாண்டுகளில் விஜயநகர அரசர்கள் வணங்கி ஆதரித்த ஆலயமாகவும் திகழ்ந்திருக்கிறது. திருமலா திருப்பதி தேவஸ்தானத்தின் பராமரிப்புக்குள் இந்த கோயிலும் அடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications