திருப்பதி ஏழுமலையான் கோயில் அல்லது வெங்கடேஸ்வரா கோயில் நாட்டிலுள்ள மிகப்பழமையான புகழ் பெற்ற ஆன்மீக யாத்திரை ஸ்தலமாகும். இது திருவேங்கட மலையின் 7வது சிகரத்தில் வீற்றுள்ளது.
புஷ்கரணி ஆற்றின் தெற்கே அமைந்துள்ள இந்த கோயில் முழுக்க முழுக்க திராவிட பாரம்பரிய கோயிற்கலை கட்டுமான அம்சங்களுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 2.2 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த கோயிலின் உள்ளே 8 அடி உயர வெங்கடேஸ்வரர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
ஆனந்த நிலைய திவ்ய விமானம் எனும் தங்க பீடத்தின்மீது இந்த சிலை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த விக்கிரகத்தின் கண்களில் ஜொலிக்கும் மாணிக்க ரத்தினக்கற்கள் பொதிக்கப்பட்டுள்ளன.
கற்பூரம் மற்றும் குங்குமம் போன்றவையும் இவற்றோடு சேர்த்து பொதிக்கப்பட்டிருக்கிறது. ஐதீக ஆசாரங்களின்படி வராஹஸ்வாமியை வணங்கிவிட்டு அதன் பின்னரே ஸ்ரீ வெங்கடேஸ்வரை தரிசிக்க வேண்டும் எனும் நெறி கடைபிடிக்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications