சுனேரி கொதி அல்லது ஷீஷ் மஹால் என்று அழைக்கப்படும் இந்த புகழ்பெற்ற தங்க மாளிகையானது தன் வரலாற்றுப் பின்னணியுடன் சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவர்ந்து இழுக்கிறது. உட்புறச்சுவர்களில் தங்கப்பூச்சு கொண்டுள்ள இந்த மாளிகை விலையுயர்ந்த கற்கள் மற்றும் கண்ணாடிகளைப் பயன்படுத்தி நுணுக்கமாக அலங்கரிக்கப்பட்டுள்ளது.
பார்வையாளர்களை திகைப்பூட்டி மயங்க வைக்கும் வசீகர கலையம்சம் இந்த மாளிகையெங்கும் ஜொலிப்பது குறிப்பிடத்தக்கது. நஜார் பாக் சாலையில் படா குவா ஸ்தலத்திற்கு அருகில் உள்ள இந்த மஹால் - இசை, நடனம் மற்று கவிதைவாசிப்பு போன்ற கலைகளில் அதிக ஆர்வம் கொண்ட நவாப் முஹம்மது இப்ராஹிம் அலி கான் என்பவரால் கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றுவதற்காகவே பிரத்யேகமாக கட்டப்பட்டுள்ளது.
தங்க மாளிகை என்ற சிறப்பைக்கொண்டுள்ள இது தன் அலங்கார மற்றும் கட்டிடக்கலை அம்சங்களுக்காக வெகுவாக பிரசித்தி பெற்றுள்ளது. எனாமல் ஆபரண வேலைப்பாடுகளை உட்புறமெங்கும் கொண்டுள்ள இந்த மாளிகை ஏறக்குறைய ஒரு கனவு மாளிகை போன்று காட்சியளிக்கிறது. அதாவது நாம் பார்ப்பது உண்மையா என்று நமக்கே சந்தேகம் வரும் அளவுக்கு இதன் அழகு நம்மை மயக்குகிறது.



Click it and Unblock the Notifications