Search
  • Follow NativePlanet
Share
» »மும்பைக்கு போயிட்டு இதெல்லாம் செய்யாம வந்துடாதீங்க பாஸ் ...

மும்பைக்கு போயிட்டு இதெல்லாம் செய்யாம வந்துடாதீங்க பாஸ் ...

மும்பை, கனவுகளின் நகரம். நவநாகரீக இந்தியாவின் புதிய முகம். எத்தனையோ பேரின் கனவுகளும், லட்சியங்களும் காற்றிலே கலந்திருக்கும் இந்த நகரம் புதுமைக்கும், பழமைக்கும் இடையே மெல்லிய இழை போன்ற நிலையில் கால ஓட்டத்தில் பயணித்துக்கொண்டிருக்கிறது . ஒருபக்கம் உலகின் மிகப்பெரிய பணக்காரரின் வீடு, மறுபக்கம் உலகின் மிகப்பெரிய சேரி பகுதி இவைதான் மும்பையின் அடையாளம்.

இந்தியாவின் ஆன்மாவை புரிந்துகொள்ள ஏங்குகிறவர்கள் வாழ்கையில் ஒருமுறையேனும் மும்பைக்கு சென்று சில காலம் வாழ வேண்டும். விதவிதமான மனிதர்கள், அவர்களுக்குள் புதைந்துகிடைக்கும் கனவுகள், அதை நோக்கிய ஓட்டம் என நாம் பார்க்கும் ஒவ்வொருவரிடமும் ஏதோ ஒன்றை கற்றுக்கொள்ள முடியும். மனிதர்களை தாண்டி மும்பையில் சில அற்புதமான இடங்களும், செய்ய வேண்டிய விஷயங்களும் இருக்கின்றன. அவற்றைப்பற்றிய ஒரு சுவையான தொகுப்பை காண்போம் வாருங்கள்.

இந்தியாவின் நுழைவு வாயில் :

இந்தியாவின் நுழைவு வாயில் :

மும்பை என்றதும் சட்டென நம் நினைவுக்கு வருவது இந்தியாவின் நுழைவு வாயில் எனப்படும் 'கேட் வே ஆப் இந்தியா' தான். மும்பைக்கு வரும் எவரும் தவறாமல் வரவேண்டிய இடங்களில் இது முதன்மையானது.

ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் மற்றும் அரசி மேரி ஆகியோரின் இந்திய வருகையை நினைவுகூரும் பொருட்டு 1911ஆம் ஆண்டு இது கட்டப்பட்டிருக்கிறது.

Rakesh

இந்தியாவின் நுழைவு வாயில் :

இந்தியாவின் நுழைவு வாயில் :

மும்பைவாசிகளின் மிகவும் விருப்பத்துக்குரிய இடங்களில் ஒன்றாக திகழும் இங்கே மாலை நேரத்தில் அரபிக்கடலை ரசித்தபடியே காலாற நடைபோடுவது இனிமையானதொரு அனுபவமாக இருக்கும்.

இந்தியாவின் நுழைவு வாயில் :

இந்தியாவின் நுழைவு வாயில் :

புகழ்பெற்ற தாஜ் ஹோட்டலுக்கு வெகு அருகில் அமைந்திருக்கும் கேட் வே ஆப் இந்தியாவில் இருந்து சில கி.மீ தொலைவில் இருக்கும் எலிபெண்டா தீவுகளுக்கு படகு போக்குவரத்து நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.

Andy Hay

மரைன் டிரைவ் :

மரைன் டிரைவ் :

தெற்கு மும்பையில் நரிமன் பாயின்ட் என்ற இடத்தில் இருந்து மலபார் ஹில் வரை அரபிக்கடலை ஒட்டியிருக்கும் 4.3 கி.மீ நீள 'C' வடிவிலான சாலையேமரைன் டிரைவ் எனப்படுகிறது.

வண்ண விளக்குகளின் மத்தியில் இரவு நேரத்தில் இந்த சாலையில் பயணம் செய்வது வார்த்தைகளால் விவரிக்க முடியாத அனுபவமாக இருக்கும்.

Rajarshi MITRA

மரைன் டிரைவ் :

மரைன் டிரைவ் :

மும்பையின் மிக முக்கியமான பகுதியில் அமைந்திருக்கும் இந்த சாலை 'Queen's Necklace' அதாவது ராணியின் அணிகலன் என்ற சிறப்பு பெயராலும் விளிக்கப்படுகிறது.

உயரமான இடத்தில் இருந்து இந்த சாலையை இரவு நேரத்தில் பார்க்கும் பொழுது தங்க நிறத்தில் நெக்லஸ் போல காட்சியளிப்பதே இந்த பெயர் வரக் காரணமாக சொல்லப்படுகிறது.

Parth Maniar

சௌபாத்தி கடற்கரை :

சௌபாத்தி கடற்கரை :

இந்த மரைன் டிரைவ் சாலையின் முடிவில் மாலை நேர உணவுகளுக்கு பிரபலமான சௌபாத்தி கடற்கரை அமைந்திருக்கிறது. மும்பையின் இரைச்சலில் இருந்து தப்பித்து மாலை நேரத்தில் மனதுக்கு பிடித்தமானவருடன் நேரம் செலவிடவும், நண்பர்களுடன் கடற்கரை மணலில் கிரிக்கெட் விளையாடவும் நல்லதொரு இடமாகசௌபாத்தி கடற்கரை திகழ்கிறது.

சௌபாத்தி கடற்கரை :

சௌபாத்தி கடற்கரை :

பேல் பூரி, பானி பூரி போன்ற மாலைநேர துரித உணவுகளின் பிறப்பிடமாக இந்த சௌபாத்தி கடற்கரை சொல்லப்படுகிறது. மும்பைக்கு சுற்றுலா வரும் அனைவரும் நிச்சயம் இந்த கடற்கரைக்கு வந்து இங்கு கிடைக்கும் அதி சுவையான பாவ பாஜ்ஜி, போன்ற மும்பைக்கே உரிய துரித உணவுகளை சுவைத்திட வேண்டும்.

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் :

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் :

மும்பையில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் மிக முக்கியமானது விநாயகர் சதுர்த்தி விழாவாகும். மும்பை நகரம் முழுக்கவும் விதவிதமான வடிவங்களில் விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு பூஜைகள் செய்யப்படுகின்றன.

பின் விநாயகர் சதுர்த்தியின் கடைசி நாளன்று சிலைகள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு அரபிக்கடலில் கரைக்கப்படுகின்றன. இந்த நாளின் போது மும்பை நகரமே விழாக்கோலமாக காட்சியளிக்கிறது.

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் :

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் :

குறிப்பாக மும்பையின் முக்கிய பகுதியில் அமைந்திருக்கும் கடற்கரையான சௌபாத்தி கடற்கரையில் ஆயிரத்துக்கும் அதிகமான விநாயகர் சிலைகள் கரைக்கப்படுகின்றன.

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் :

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் :

சௌபாத்தி கடற்கரையில் லட்சக்கணக்கான மக்கள் பங்குகொண்டு நடைபெறும் விநாயகர் சிலை கரைப்பு நிகழ்வை ஹெலிக்காப்டரில் இருந்து கண்காணிக்கும் பாதுகாப்பு படையினர்.

சோர் பஜார் :

சோர் பஜார் :

ஷாப்பிங் செய்வது உங்களுக்கு மிகவும் பிடிக்குமென்றால் தெற்கு மும்பையில் இருக்கும் சோர் பஜாருக்கு நீங்கள் நிச்சயம் செல்ல வேண்டும். கைவினைப்பொருட்கள், ஆடைகள், காலணிகள், மின்சாதனப் பொருட்கள் என சகலமும் குறைந்த விலைக்கு இங்கே வாங்க முடியும்.

சோர் பஜார் :

சோர் பஜார் :

சோர் பஜாரில் உள்ள ஒரு கடையில் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டிருக்கும் மின்சாதன பொருட்கள்.

தாராவி :

தாராவி :

மும்பையில் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் பகுதியாக சொல்லப்படுவது ஆசியாவின் மிகப்பெரிய சேரிப் பகுதியாக திகழும் தாராவி தான். ஆஸ்கர் விருது பெற்ற 'ஸ்லம் டாக் மில்லியனர்' திரைப்படம் மூலம் உலக அளவிலான கவனத்தை இந்த இடம் ஈர்த்திருக்கிறது.

மும்பையில் வாழும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை தெரிந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் நிச்சயம் இந்த தாராவி பகுதிக்கு செல்லவேண்டும்.

எளிபண்டா குகைகள் :

எளிபண்டா குகைகள் :

மும்பை துறைமுகத்தில் இருந்து 10கி.மீ தொலைவில் சிறிய தீவு ஒன்றில் அமைந்திருக்கின்றன இந்த எளிபண்டா குகைகள். கி.பி 5-6 நூற்றாண்டை சேர்ந்த இந்தியாவில் இருக்கும் மிகப்பழமையான குடைவரைச் சிற்பங்கள் இந்த குகைகளினுள் இருக்கின்றன.

இவை தவிர இன்னும் பல சுற்றுலாத்தலங்கள் மும்பையில் இருக்கின்றன அவற்றைப் பற்றிய விரிவான தகவல்களை தமிழின் முதன்மை பயண வழிகாட்டியான தமிழ் நேடிவ் பிளானட்டில் தெரிந்துகொள்ளுங்கள்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X