Search
  • Follow NativePlanet
Share
» »எச்.ராஜா வழிபட்ட சுவாமி மலைக் கோவிலின் இந்த 10 அற்புதங்கள் தெரியுமா?

எச்.ராஜா வழிபட்ட சுவாமி மலைக் கோவிலின் இந்த 10 அற்புதங்கள் தெரியுமா?

தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டிலுள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்திற்கு மிக அருகில் உள்ள ஒரு நகரம் சுவாமிமலை. நேரடியாக மொழிபெயர்த்தால், சுவாமிமலை என்பதற்கு கடவுளின் மலை என்று பொருள் படும். ஆனால்

By Udhaya

தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டிலுள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்திற்கு மிக அருகில் உள்ள ஒரு நகரம் சுவாமிமலை. நேரடியாக மொழிபெயர்த்தால், சுவாமிமலை என்பதற்கு கடவுளின் மலை என்று பொருள் படும். ஆனால் சுவாமிமலையின் பண்டைகாலப் பெயர் திருவேரகம் என்பதாகும். இவ்விடத்தினைச் சுற்றிலும் தெய்வ பிரசன்னம் இருப்பதை தெளிவாக உணர முடியும். தமிழ் கடவுளான முருகப் பெருமானின் ஆறு படைவீடுகளில் சுவாமிமலையும் ஒரு படைவீடாகும்.

வெண்கலக் காசுகள் செய்யக் கற்றுத்தரும் பள்ளி

வெண்கலக் காசுகள் செய்யக் கற்றுத்தரும் பள்ளி

மாநிலத்திலேயே வெண்கலக் காசுகள் செய்யக் கற்றுத்தரும் ஒரே பள்ளி இங்குதான் உள்ளது. இயற்கையாகவே வேளாண்மைப் பொருளாதாரத்தைச் சார்ந்துள்ள இந்நகரத்தில் உற்பத்தி செய்யப்படும் இரண்டு வேளாண்மைப் பொருள்கள் நெல்லும், கரும்புமாகும். வரலாற்றுப் பின்புலம் காவிரியாற்றின் கிளையாறு ஒன்றின் கரையில் அமைந்துள்ள சுவாமிமலையானது முருகப் பெருமான் என்று அழைக்கப்படும் கார்த்திகேயக் கடவுளின் அறுபடைவீடுகளில் நான்காவது படைவீடாகக் கருதப்படுகிறது.

Jothi Balaji

 பிரணவ மந்திரத்தின் பொருளை அறிவோம்

பிரணவ மந்திரத்தின் பொருளை அறிவோம்

இத்தலத்தோடு தொடர்புடைய புராணங்களின்படி, முருகப் பெருமான் "ஓம்" என்னும் பிரணவ மந்திரத்தின் பொருளை தனது தந்தையான சிவபெருமானுக்கு உரைத்த தலம் சுவாமிமலையாகும். இக்கோவிலின் ராஜகோபுரத்தில் செதுக்கப்பட்டுள்ள சிலைகளில், மந்திரத்தின் பொருளை விளக்கும் முருகப்பெருமான் குருவாகவும், மந்திரப் பொருளை காதில் கேட்கும் சிவபெருமான் சீடனாகவும் செதுக்கப்பட்டுள்ளனர்.

Ravichandar84

சுவாமிநாதன் என்பவர் யார் தெரியுமா

சுவாமிநாதன் என்பவர் யார் தெரியுமா

இப்புராணக் கதையின் விளைவாகவே இவ்வூருக்கு சுவாமிமலை என்னும் பெயர் வந்தது. மேலும் இங்குள்ள முருகப் பெருமான் சுவாமிநாதன் என்று அழைக்கப்படுகிறார். திருவிழாக்கள் கோவில்கள் நிறைந்த நகரமான கும்பகோணத்திற்கு வெகு அருகாமையில் அமைந்திருப்பதால், ஏராளமான பக்தர்களும் சுற்றுலாப்பயணிகளும் சுவாமிமலைக்கு வருகைபுரிகிறார்கள். ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் தேர்த்திருவிழா, மார்ச் மாதத்தில் நடைபெறும் பங்குனி உத்திரம் உள்ளிட்ட பிரபலமான திருவிழாக்கள் இங்கு கொண்டாடப்படுகின்றன. மே மாதத்தில் வைகாசி விசாகத்திருவிழாவும், அக்டோபர் மாதத்தில் கந்த சஷ்டித்திருவிழாவும் கொண்டாடப்படுகின்றன.

UnreachableHost

 செயற்கையாக உருவாக்கப்பட்ட மலை

செயற்கையாக உருவாக்கப்பட்ட மலை


சற்று உயரமான இடத்தில், செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு மலையில், அமைந்துள்ள ஆன்மீகத்தலம் இதுவாகும். நெடுங்காலமாக இந்துக்களால் நம்பப்பட்டு வரும் மனிதனின் சராசரி ஆயுள் காலமான 60 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில், தரையிலிருந்து கோவிலுக்குச் செல்ல 60 படிக்கட்டுகள் கொண்ட பாதை அமைந்துள்ளது.

பா.ஜம்புலிங்கம்

 கருவறைக்குள் அழைத்துச் செல்லப்பட்டு தரிசனம் செய்ய அனுமதி

கருவறைக்குள் அழைத்துச் செல்லப்பட்டு தரிசனம் செய்ய அனுமதி

இக்கோவில் மூன்று தளங்களைகொண்டது. மேல் தளங்களுக்குச் செல்லச் செல்ல உயரமான குறுகலான படிக்கட்டுகளைக் கடக்கவேண்டியுள்ளது. முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்ய விரும்புபவர்கள் கோவிலின் கருவறைக்குள் அழைத்துச் செல்லப்பட்டு தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்த அபிஷேகம் என்னும் பூஜை சுமார் 60 நிமிடங்கள் நீடிக்கும். அபிஷேகத்தின் போது, சுவாமிக்கு, பல்வேறு வகையான நைவேத்தியங்கள் படைக்கப்பட்டு, போற்றிப் பாடல்கள் பாடப்படுகின்றன.

பா.ஜம்புலிங்கம்

 மகனின் கோயிலினுள் அப்பாவுக்கு கோயில்

மகனின் கோயிலினுள் அப்பாவுக்கு கோயில்

கோவிலின் நடுப்பகுதியானது பக்தர்கள் வலம் வரும் பிரகாரமாகும். கீழ்ப்பகுதியில் சிவபெருமானின் ஆலயம் உள்ளது. தங்கும் வசதியும் உணவும் ஆலய நிர்வாகத்தால் அளிக்கப்படுகின்றன. அல்லது பக்தர்கள் விரும்பினால், கோவிலைச்சுற்றியுள்ள ஏராளமான உணவகங்களில் உணவு எடுத்துக் கொள்ளலாம்.

Rsmn

Read more about: travel temple பயணம்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X