Search
  • Follow NativePlanet
Share
» »வயநாடு போனால் நீங்கள் அவசியம் போக வேண்டிய 10 இடங்கள் இதோ

வயநாடு போனால் நீங்கள் அவசியம் போக வேண்டிய 10 இடங்கள் இதோ

கேரளம் மாநிலத்தில் உள்ள மிக முக்கியமான இடங்களில் ஒரு வயநாடு. கிராமப்புறங்கள் அதிகம் நிறைந்த மாவட்டம்., இங்கு மலைகள், ஆறுகள், காபி, மிளகு, தேயிலை, ஏலக்காய் தோட்டங்கள் மற்றும் பசுமையான அழகிய அமைதியான நகரம் ஆகும். பரபரப்பான நகர வாழ்க்கையிலிருந்து விலகி, அமைதியாக ஓய்வு எடுப்பதற்கு மிகவும் ஏற்ற இடமாகும். இயற்கை அழகுடன் கலந்து வயநாடில் பார்க்க வேண்டிய 10 அமைதியான மற்றும் அழகான இடங்களை வாங்க பார்த்து விட்டு வரலாம்.

Wayanad

பனாசுர சாகர் அணை

இந்தியாவின் மிகப்பெரிய மண் அணை, பசுமையான மலைகளால் சூழப்பட்ட அமைதியான நீர்த்தேக்கம் ஆகும். பரந்து விரிந்து இருக்கும் இந்த அணை இயற்கை அழகுடன் காட்சியளிக்கிறது. மேலும் இந்த அணையில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக ஸ்பீட் போட் சவாரி மற்றும் பானசுர மலையேற்றம் போன்ற சாகச நடவடிக்கைகளும் உள்ளது.

மீன்முட்டி நீர்வீழ்ச்சி

இந்த நீர்வீழ்ச்சி வயநாடில் உள்ள மிகப்பெரிய நீர்வீழ்ச்சியாகும். இது மூன்று நிலைகளை கொண்டுள்ள 1000 அடி உயரமுள்ள இயற்கையான அழகிய நீர்வீழ்ச்சி. சுற்றுலா பயணிகள் அமைதியாக பொழுதுபோக்குவதற்கு ஏற்ற இடமாகும்.

எடக்கல் குகைகள்

பசுமையான மலைகளால் சூழப்பட்டுள்ளது. இங்கு பழங்கால சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட வரலாற்று சிறப்புமிக்க பல அம்சங்கள் உள்ளன. இயற்கை எழில் கொஞ்சும் அழகான, த்ரில்லிங்கா இடமாகும்.

Wayanad

பூக்கோடு ஏரி

அடர்ந்த காடுகள் மற்றும் உருளும் மலைகளால் சூழப்பட்ட ஒரு அழகிய நன்னீர் ஏரியாகும். பார்க்க பார்க்க திகட்டாத அழகை பருக வைக்கும் அற்புதமான இடம்.

குருவத்வீப்

இது வயநாடின் சிறந்த சுற்றுலா தலமாகும். கபினி ஆற்றின் நடுவில் உள்ள அமைதியான மற்றும் அழகான இயற்கை சூழலை உடைய தீவாகும்

தோல்பெட்டி வனவிலங்கு சரணாலயம்

இயற்கை அழகுடன் கூடிய இந்த சரணாலயத்தில் குறைந்த கூட்டங்களுடன் காணப்படும் யானைகள், மான்கள் மற்றும் சிறுத்தைகள் போன்ற விலங்குகளை ஜீப் சஃபாரி மூலம் சுற்றி பார்ப்பதற்கு ஏற்ற இடமாகும்.

சூசிபாரா நீர்வீழ்ச்சி

சூசிபாரா நீர்வீழ்ச்சி பசுமையான மற்றும் மலை காடுகளால் சூழப்பட்ட மூன்றடுக்கு நீர்விழ்ச்சியாகும். 200 அடி உயரத்தில் இருந்து விழும் இந்த நீர்வீழ்ச்சியின் கீழே இயற்கையாக அமைந்துள்ள குளம் உள்ளது. இதில் உள்ள குளிர்ச்சியான நீரில் குளித்து மகிழலாம்.

செம்புரா சிகரம்

மலைகள், தேயிலை தோட்டங்கள் மற்றும் பசுமையான பள்ளத்தாக்குகளால் சுழப்பட்டுள்ள செம்ப்ரா சிகரம் மலையேற்றம் செய்பவர்களுக்கு ஏற்ற இடமாகும். இங்குள்ள இதயம் வடிவிலான ஏரி முதல் பார்வையிலே கவர்ந்து இழுக்கும் வகையில் உள்ளது.

கரப்புழா அணை

கேரளாவில் கரபுழா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இரண்டாவது பெரிய அணையாகும். இந்த அணையில் உள்ள அட்வென்சர் பார்கில் பல சாகச விளையாட்டுகள் உள்ளன. மேலும் மாலை வேளையில் சூரியன் மறையும் நேரத்தில் அமைதியான சூழலை அனுபவிக்க ஏற்ற இடமாகவும் உள்ளது.

பேய்ப் பாறை:

அமைதியான மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியில் அமைந்துள்ள, மனித மண்டை ஓடு போன்ற வடிவத்தில் காணப்படும் ஒரு தனித்துவமான பாறை பகுதியாகும்.

More News

    Read more about: wayanad kerala
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+