Search
  • Follow NativePlanet
Share
» »வெயிலுக்கு இதம் தரும் இந்தியாவின் டாப் 10 சில்ல்ல்ல் இடங்கள்!!

வெயிலுக்கு இதம் தரும் இந்தியாவின் டாப் 10 சில்ல்ல்ல் இடங்கள்!!

By Balakarthik Balasubramanian

கோடை என்ற சொல்லின் வாடை பிடித்து பயந்து அலறி ஓடுவோர் இங்கே பலர் இருக்க..."எங்காவது வெளியில் செல்லடா மடையன்..." என நம்மை குளிர்பிரதேசத்தை நோக்கி துரத்துகிறது நம் மனம். அப்பேற்ப்பட்ட குளுமை நிறைந்த மனதை அமைதிகொள்ள செய்யும் இடங்களை தான் நாம் இப்பொழுது பார்க்க போகிறோம்.
கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்க...நாட்டில் இருக்கும் குளிர்பிரதேசத்தை நோக்கி நாம் படையெடுத்து கிளம்பி மனதை புத்துணர்ச்சி கொள்ள செய்வதே சிறந்த தோர் வழியாக பலரும் கருதுகின்றனர். அப்படி பட்ட இடங்களை பட்டியலிட்டு
'இந்த இடம் செல்லலாமா....இல்லை வேண்டாம்... அந்த இடம் செல்லலாம்...அதனை விட இது தான் குளிர்ச்சி அதிகம்....'
என மனதிடம் சண்டையிட்டு பந்தயம் போட்டு இறுதியாக கோடை வெயிலை தனிக்க ஒரு சில இடங்களை தேர்ந்தெடுத்து நாங்கள் புறப்பட தயாராகினோம்.
கண்கொள்ளா காட்சிகளை பரிசாக தர காத்திருக்கும் கடற்கரைகளும், அவற்றிலிருந்து எழுந்து நம்மை காண வரும் அலைகளும் நம் பயணத்திற்கு மேலும் அழகு சேர்த்து மனதை ஆச்சரியத்தில் ஆழ்த்தி புதியதோர் அனுபவத்தினை நமக்கு தருகிறது. நீங்கள் ஆன்மீகம் மற்றும் மன உற்சாகத்தை நாடுபவரா? அப்படி என்றால்...இமயமலையை நீங்கள் பிரவேசிப்பதன் மூலம் இந்த பயணம் உங்களுக்கு நல்ல கருத்துக்களை மனதில் தூண்டும் ஒரு பயணமாக அமையும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் வேண்டாம். அதேபோல் இங்கே மேற்கு மலைதொடர்ச்சியில் காணப்படும் அதிகளவிளான தேயிலை தோட்டங்களும் மசாலா பானிகளும் நம் மனதை பசுமையான காட்சிகளை கொண்டு ஆள்கிறது.

அப்பொழுது பாதரசங்களின் அளவு அதிகரிக்க...அதன் வாழ்க்கை உறிஞ்சபடுகிறது இந்த பகுதியில் பருவ விடுமுறையை செலவிட நமக்கு இரண்டு வகையான யோசனைகள் தோன்றுகிறது. நீங்கள் வேலை நாட்களில்...தேவைக்கேற்ப விடுமுறை எடுத்து பயணத்தை கழி(ளி)க்க நினைத்தால்...உங்களுக்கு 5 லிருந்து 9 நாட்கள் தோராயமாக தேவைப்படுகிறது. அதுவே விடுமுறை காலங்களில் உங்கள் பயணம் இருக்குமாயின்...கண்டிப்பாக குடும்பத்துடனும் நண்பர்களுடனும் செல்ல ஒருபோதும் மறந்துவிடாதீர்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

அதனால் ஒரு இடைவெளியை நீங்கள் எடுத்துகொண்டு...இனிமையானதோர் மன அழுத்தமற்ற நேரத்தை தேர்தெடுத்து உங்களுக்கு விருப்பமானவர்களுடன் செல்வீர்களாயின்... உங்கள் நாள்களின் திருப்பப்படாத இனிய பக்கங்களாக அத்தகைய நாட்கள் உங்களுக்கு அமையும் என்பதில் எந்த ஒரு மாற்று கருத்துமில்லை. இப்பொழுது கீழ்க்காணும் பத்தியின் வாயிலாக....நாம் சில முக்கியமான அனலை அப்புறப்படுத்தும் இடங்களை பற்றி கொஞ்சம் பார்க்கலாமே...வாருங்கள்...

சிக்கல்தாரா:

சிக்கல்தாரா:

அமராவதி மாவட்டத்தில் காணப்படும் ஒரு ஆழமான பள்ளத்தாக்கு பகுதிதான் இந்த சிக்கல்தாராவாகும். இங்கே மூடப்பட்டுள்ள படுகைகள் அழகிய நிழலை தந்து மனதினை இதமாக்க...இங்கே காடுகளில் அழகிய தாவரங்களும், கர்ஜிக்கும் விலங்குகளும் நம்மை வியப்பை நோக்கி அழைத்து செல்கிறது. அதுமட்டுமல்லாமல்... அழகிய ஒலியை எழுப்பி கொண்டிருக்கும் ஏரிகளும், நீர்வீழ்ச்சிகளும், காட்சியினை பிரதிபலித்திகொண்டிருக்கும் பல இடங்களும் என...பல அதிசயங்களை நிரப்பிகொண்டு அமைதியாக அமைந்திருக்கிறது இந்த சிக்கல்தாரா. கடல் மட்டத்திலிருந்து 1118 மீட்டர் உயரத்தில் காணப்படும் இந்த இடம்...மகாராஷ்ட்ராவில் காபிதோட்டங்கள் அதிகம் விளையும் ஒரு இடமாகும்.

நீங்கள் இயற்கையின் மடியில் கிடந்து புரள ஆசைகொள்ளும் ஒருவரா? அப்படி என்றால்...எவ்வளவு இடங்களை நீங்கள் இதற்கு முன்பு பார்த்திருந்தாலும் அதனை முந்திகொண்டு இந்த சிக்கல்தாரா முன்னிலை வகிக்கும் என்பதில் எந்த ஒரு ஏமாற்றமும் உங்களுக்கு வேண்டாம். இங்கே காணும் பள்ளத்தாக்குகளின் நீர்வீழ்ச்சியின் சத்தம் நம் செவியில் சிதைந்து நாசியை வருடுகிறது என்றே கூற வேண்டும். மேலும் இங்கே காணும் காபி தோட்டங்கள்...நம்மை காட்சிகளால் கவர்ந்து மனதை இதமாக்க முயல்கிறது. இங்கே காணும் இயற்கை காட்சிகள்...இனிமையானதோர் பயணத்தை நமக்கு உணர்த்த...இங்கே அங்கும் இங்கும் உலவும் வனவிலங்குகளும் நம்மை பரவசமடைய செய்கிறது என்று தான் சொல்லவேண்டும். இங்கே நம் பாதங்களை ஊன்றி நிற்க...தென்றல் வந்து நம்மை தீண்டி...மனதினை மேகங்களின் அழகிய ஓட்டங்களின் பின்னால் இழுத்து செல்கிறது.

Dhirajphotography

வர்கா கடற்கரை:

வர்கா கடற்கரை:

இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை...என்றுமே மனதில் கனவு கோட்டைகள் பல கட்டி அதில் நண்பர்களுடனும், காதலியுடனும். மனைவியுடனும், சொந்தங்களுடனும் ஆடிபாடி ஆசைகொள்ளும் ஒரு சொர்க்க பூமி தான் இந்த கோவா என்பதில் எந்த ஒரு சந்தேகமுமில்லை. இந்தியர்கள் மட்டும் வந்து செல்லும் இடமல்ல இந்த கோவா...என்பது இங்கே வந்து செல்லும் அயல் நாட்டவர்களின் மூலமாகவும் நம் மனதிற்கு பளிச்சென்று தெரிகிறது. கடல் அலைகளும் மனல் திட்டுகளும் மனதை மயக்கி ஆட்சி செய்ய...அத்துடன் பாரம்பரிய நினைவுச்சின்னங்களான போர்த்துகீசிய செல்வாக்குகள், கண் இமைகளை கொள்ளைகொள்ளும் தேவாலயங்கள் மற்றும் ஆலயங்கள் என செல்லும் இடமெல்லாம் மனதை ஆரவாரம் செய்யவும் ஆன்மீகத்தினால் அமைதிகொள்ள செய்யவும் காத்துகொண்டிருக்கிறது இந்த கோவா. அத்துடன் பழைய பொருட்களை விற்கும் சந்தைகளும், ஆடம்பரமான உணவு வகைகளும் என அயல் நாட்டிற்கு சென்றதோர் உணர்வினை இந்த கோவா நமக்கு தருகிறது என்றால் நீங்களே பார்த்துகொள்ளுங்களேன்...

Andy Mitchell

வர்கா கடற்கரை:

வர்கா கடற்கரை:

இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை...என்றுமே மனதில் கனவு கோட்டைகள் பல கட்டி அதில் நண்பர்களுடனும், காதலியுடனும். மனைவியுடனும், சொந்தங்களுடனும் ஆடிபாடி ஆசைகொள்ளும் ஒரு சொர்க்க பூமி தான் இந்த கோவா என்பதில் எந்த ஒரு சந்தேகமுமில்லை. இந்தியர்கள் மட்டும் வந்து செல்லும் இடமல்ல இந்த கோவா...என்பது இங்கே வந்து செல்லும் அயல் நாட்டவர்களின் மூலமாகவும் நம் மனதிற்கு பளிச்சென்று தெரிகிறது. கடல் அலைகளும் மனல் திட்டுகளும் மனதை மயக்கி ஆட்சி செய்ய...அத்துடன் பாரம்பரிய நினைவுச்சின்னங்களான போர்த்துகீசிய செல்வாக்குகள், கண் இமைகளை கொள்ளைகொள்ளும் தேவாலயங்கள் மற்றும் ஆலயங்கள் என செல்லும் இடமெல்லாம் மனதை ஆரவாரம் செய்யவும் ஆன்மீகத்தினால் அமைதிகொள்ள செய்யவும் காத்துகொண்டிருக்கிறது இந்த கோவா. அத்துடன் பழைய பொருட்களை விற்கும் சந்தைகளும், ஆடம்பரமான உணவு வகைகளும் என அயல் நாட்டிற்கு சென்றதோர் உணர்வினை இந்த கோவா நமக்கு தருகிறது என்றால் நீங்களே பார்த்துகொள்ளுங்களேன்...

Andy Mitchell

https://commons.wikimedia.org/wiki/File:Varca_Beach,_Goa_(5647268940).jpg?uselang=en-gb


கனட்டல்:

உத்தரகன்ட் மாநிலத்தில் காணப்படும் ஒரு அழகிய சிறிய மலைக் குக்கிராமம் தான் இந்த கனட்டல் ஆகும். ஆண்டு முழுவதும் பெய்யும் பனி..இந்த கிராமத்தை ஆட்சி செய்ய...நம் மனமும் அதில் கொள்ளை அடித்து செல்லப்பட்டு வழி முழுவதும் மனதினை தேடி அலைகிறோம் என்று தான் சொல்லவேண்டும். அவ்வாறு மனதை தேடி நாம் உலாவ....செல்லும் வழியில் நம் கண்களில் தென்படும் ஆப்பிள் தோட்டங்களும், வனத்தில் பூத்து குலுங்கும் மலர்களும், உள்ளூரில் காணப்படும் ஈடு இணையற்ற அன்பினோர்களும் தென்பட...அவர்கள் தான் நம் அன்பினை திருடிகொண்டு சென்றிருக்க கூடும் என்பதனை அவர்கள் பழக்கவழக்கங்களின் அழகினைகொண்டு நாம் தெரிந்துகொள்கிறோம்.

நீங்கள் கலாச்சாரத்தின் அழகை மனமகிழ்ந்து பாராட்டும் ஒருவரா....? அப்படி என்றால்...இந்த சிறிய யாத்திரை தளத்தினை உங்கள் குடும்பத்துடன் சென்று கண்டு இன்புற்று மனதார திரும்பலாம் என்றே நான் இதன் பெருமையை பற்றி நாவார கூறுவேன். அட ஆமாம்...இங்கே காணும் பழைய ஆலயங்களின் அழகு நம் மனதை ஆர்ப்பரித்து அதன் பின்னர் தெய்வீக காட்சிகளால் அமைதியடையவும் செய்கிறது. நீங்கள் சாகச பயணங்களின் வாயிலாக இன்புற துடிக்கும் ஒருவரென்றால்...உங்களுடைய ஆசைகளையும் நிறைவேற்ற நிறைய சாகச இடங்கள் இங்கே காத்துகொண்டிருக்கிறது என உறுதியுடன் இந்த இடத்தின் அழகை பற்றி வாய்விட்டு பேசி மனதார பாராட்டலாம் என்றே உண்மையை உறக்க நான் சொல்வேன்.

Stuti sharma 09

பச்மார்ஹி:

பச்மார்ஹி:


மத்திய பிரதேசத்தில் 1100 மீட்டர் உயரத்தில் காணப்படும் இந்த இடம்...சாத்புராவின் இராணி என்றும் பெருமையுடன் போற்றப்படும் ஒரு இடமாகும். இங்கே சாத்புரா மலைத்தொடர்களில் காணும் எண்ணற்ற அழகும், வரலாற்று பிரசித்திபெற்ற பல இடங்களும் நம்மை ஏக்கத்துடன் திரும்பவைக்கிறது என்றே சொல்ல வேண்டும். புராணத்தின் மூலமாக நமக்கு தெரிய வருவது என்னவென்றால்...வன வாசம் சென்ற பாண்டவர்கள் ஐந்து பேரும் இங்கே தான் வந்தார்கள் என்பதும் நமக்கு தெரிய வருகிறது.

இந்த பகுதியில் காணும் ஒரு மலை...1857ஆம் ஆண்டு, கேப்டன் ஜேம்ஸ் போர்சித் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட ஒன்று எனவும் வரலாற்றின் சுவடுகள் மூலம் நமக்கு தெரிய வருகிறது. மேலும், மத்தியபிரதேசத்திலுள்ள ஒரு பிரசித்திபெற்ற மலைப் பகுதியாகவும் இந்த பகுதி அமைந்து நம் மனதில் அளவற்ற இன்பத்தை பாய்ச்சுகிறது. அத்துடன் புத்த காலத்தில் புதையுண்ட ரகசிய புதையல்களும் நிறையவே இங்குள்ள பழமையான குகையில் இருப்பதாகவும்...அதற்கு அரனாய் நீர்வீழ்ச்சி அமைந்து அழகு காட்சியை கண்களுக்கு அளிப்பதாகவும் இங்கு வந்து செல்வோர்கள் வியப்புடன் பேசுகின்றனர்.

கண்டிப்பாக இந்த இடத்திற்கு வந்து செல்லும் சுற்றுலா பயணிகளின் மனம்...அமைதியான காட்சிகளால் கொள்ளை அடிக்கப்பட்டு, மனதிற்கு பதிலாக மகிழ்ச்சியை மட்டும் நிரப்பிகொண்டு செல்வார்கள் என்பதே உசிதமானதொரு விசயமாகும். நீங்கள் உங்கள் காலணிகளை கழற்றிவிட்டு, இங்கு காணும் புல்வெளிகளில் நடந்து செல்ல "அவை வருடும் உணர்வு உங்கள் மனதை ஈவு இறக்கமற்று...மனதில் குடிகொண்ட கவலைகளை வதைக்கும்..." என்றே இதனை பற்றி பெருமையுடன் கூற...புல்வெளி பட்ட கால்கள், குழந்தை பருவத்திற்கே செல்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

Manishwiki15

 நார்கண்டா:

நார்கண்டா:

அடிவாரத்திலிருந்து 9000 அடி உயரத்தில் காணப்படும் இந்த இடம்...இயற்கை ஆர்வலர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்துகொண்டிருக்கிறது என்பதே உண்மை நீங்கா ஒன்றாகும். மேலும், இங்கே காணும் ஆப்பிள் தோட்டத்தின் அழகு நம்மை அசையவிடாமல் கட்டிபோட்டு மனதை அந்த இடத்திலே நிற்கதி அடைய செய்கிறது. வெப்பமண்டல காடுகளாலும், பிரம்மாண்டமான மலைகளாலும் சூழப்பட்ட இந்த இடம், இமாச்சல பிரதேசத்தின் வாசிகளால் தவிர்க்க கூடாத ஒரு இடமாக அமைந்து மற்ற மாநிலத்தவரையும் இயற்கை காட்சிகளை கொண்டு அரவணைக்க காத்திருக்கிறது. இங்கே காணப்படும் "தன்னு ஜாபர்" என்னும் ஏரி...சுற்றுலா பயணிகளின் தவிர்க்கப்பட கூடாத ஒன்றாக அமைந்து நம் மனதை காட்சிகளால் வருடுகிறது.

அத்துடன் ஏரிக்கு அருகில் காணப்படும் ஒரு ஆலயம்...வந்து செல்வோரை கவர்ந்து பக்தியை கர்வமின்றி வழங்குகிறது. மேலும் இந்த நார்கண்டா...சாகசங்கள் நிறைந்த ஒரு இடமாக காட்சியளித்து பல வழி பயணத்தையும் பாரபட்சம் பார்க்காமல் நமக்கு தருகிறது. இங்கே வீட்டினை போல் காணப்படும் ஒரு அழகிய மலையின் பெயர் "ஹட்டு நாக்" என்பதும் நமக்கு அங்குள்ளவர்கள் மூலம் தெரிய வர...அப்படியே அழகை நோக்கியபடியே நிற்கிறது நம் கண்கள். இங்கிருந்து நாம் பார்க்க, நகரத்தின் அழகு தென்பட...குளிர்காலத்தில் கரங்களின் உதவியுடன் நம்மால் பனி சறுக்கு சாகசமும் செய்ய முடிகிறது.

Ashish gupta

https://commons.wikimedia.org/wiki/Category:Narkanda#/media/File:Narkanda_forests_(26673859240).jpg

 ஹேவ்லாக் தீவு:

ஹேவ்லாக் தீவு:

ஹேவ்லாக் தீவு என்பது அழகிய காட்சிகளால் மனதை வருடும் ஒரு சொர்க்க பூமியாகும். ஆம், இங்கே காணும் கடற்கரையின் வென்னிற மணல், நம் மனதையும் தூய்மையாக்கி கவலைகளை கடல் அலைகளோடு இழுத்து செல்கிறது. பணக்கார பவள திட்டுகளும், பசுமையான காடுகளும் நம் மனதிற்கு விலைமதிப்பில்லா காட்சிகளை கர்வமின்றி தந்து எதிர்ப்பார்ப்பினை அதிகரிக்க செய்கிறது. இந்த தீவு அந்தமான் தீவுகளிலே அதிகம் மக்கள் வாழ் இடமாக தென்படுகிறது.

அத்துடன் இந்த தீவு சுமார் 113 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் சூழ்ந்து காணப்படுகிறது. அதாவது போர்ட் பிளேரிலிருந்து தோராயமாக 40கிலோமீட்டர் சுற்றி காணப்படுகிறது.

இந்த தீவின் சிறப்பம்சங்களாக... அழகிய கடற்கரை மணல்வெளிகள் இருக்க...மழை உண்ணும் வனப்பகுதிகளில் பச்சை நிற மேடுகளோடு பிணைக்கப்பட்டுள்ளன. அத்துடன் இங்கே காணும் ஆஷூர் கடல் நம்மை எல்லாம் உற்சாகத்தில் ஆழ்த்தி இன்பத்தில் தள்ளுகிறது என்றே கூற வேண்டும்.

Mvbellad

 லாஹௌல்:

லாஹௌல்:

இந்த பகுதி பச்சை பசேல் என காணப்படுவதுடன் ஸ்பித்தி மற்றும் லடாக்கை விட கொஞ்சம் அதிக வளர்ச்சி அடைந்த ஒரு இடமாகவும் தென்படுகிறது. மணலிக்கும் ஹேஹ்ஹிக்கும் செல்லும் பயணிகள்...வேகமாக செல்ல, இடையில் காட்சிகளை சமர்ப்பிக்க காத்துகொண்டிருக்கும் இந்த அழகிய இடத்தை கண்டுகொள்ளாமல் செல்வது நியாயமா என்ன?

ஹிமாச்சல பிரதேசத்தின் தரிசு நிலமாக கருதப்படும் இந்த லாஹௌல், திபெத்திய பௌத்தத்தின் மையமாகவும் திகழ்கிறது. ஆம், அதனால் புத்த மடங்களை பற்றியும் அவர்கள் போதிக்க துடிக்கும் பலவற்றையும் நம்மால் தெரிந்துகொள்ள முடிகிறது.

Sundeep bhardwaj

மடிக்கேரி:

மடிக்கேரி:

கர்நாடக மாநிலத்தின் குடகு மாவட்டத்தில் ஒரு அங்கமாக விளங்கும் இந்த மடிக்கேரி...பிரசித்திபெற்ற மலை வாசஸ்தங்களுள் ஒன்றாகும். விடுமுறையின் போது நாம் இங்கே வந்து செல்ல...இயற்கை காட்சிகளாலும், அழகென்னும் ஆபரணத்தால் தன்னை அலங்கரித்து கர்வமின்றி காட்சிகளை நமக்கு பரிசளிக்கும் இயற்கை அன்னையின் ஈடு இணையற்ற பாசத்தாலும், ஏராளமான அற்புதமான காட்சிகளாலும், அழகிய வனங்களாலும் சூழ்ந்து இந்த மடிக்கேரி நம் மனதை மயக்கி ஏக்கத்துடன் திரும்பவைக்கிறாள் என்றே நாம் சொல்லவேண்டும்.

அத்துடன் இயற்கை அழகும், வரலாற்று சிறப்புகளும், மதவழிப்பாட்டு தளங்களும் இங்கு பின்னி பிணைந்து நம்மை கட்டிபோட்டு எட்டி செல்ல இயலாமல் மனம் தவிக்கிறது என்றே கூற வேண்டும். இங்கே பல வகையான சுற்றுலா பயணிகளும் வந்துபோக...அவர்கள் அனைவரது மனதையும் காட்சிகளால் கொள்ளை அடித்து எல்லைத் தாண்டிய எதிர்ப்பார்ப்பை மனதில் புகுத்துகிறாள் இந்த மடிக்கேரி என்று நாம் பெருமை நீங்கா தன்மையுடன் இந்த இடத்தை பற்றி புகழ்ந்து கூறலாம்.

Rameshng

இலட்சத்தீவுகள்:

இலட்சத்தீவுகள்:

அரபிக்கடலில் இந்தியாவின் மேற்கு கடற்கரையில் அமைந்து அழகிய காட்சிகளை 400 கிலோமீட்டர் பரப்பளவில் தந்துகொண்டிருக்கும் அழகிய தீவு தான் இந்த இலட்சத்தீவாகும். சுமார் 32 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் காணப்படும் இந்த தீவில் 36 சிறு சிறு தீவுகள் அமைந்து நம் மனதை காட்சிகளால் ஆள்கிறது. அத்துடன் 12 தீவுகளும், 3 திட்டுகளும், 5 நீரில் மூழ்கியுள்ள வங்கிகளும் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தி ஆரவாரம் செய்கிறது.

இந்த தீவின் அழகு ரகசியம் பற்றி நாம் ஆராய...."அது நான் தான்..." என முந்திகொண்டு நிற்கிறது அடர்த்தியான தென்னை மரங்கள். "நீ மட்டுமா காரணம்...நானும் தான்..." என அந்த தென்னை மரத்துக்கு போட்டியாக நூல்களை போன்ற மெல்லிசான மணல்கள் கிளம்பி, நம் மனதை காட்சிகளால் தெளிவுபடுத்துகிறது. இந்த தீவு கடலில் அமைக்கப்பட்டிருப்பதோடு...எண்ணற்ற கடல் உயிரினங்களின் வாழ்க்கையும் இந்திர நீலக்கல்லின் நீல நிறத்தை பற்றின பல சுவாரஷ்யமான தகவல்களும் நமக்கு தெரியவருகிறது.

Thejas

 கண்டா காட்:

கண்டா காட்:

இந்த இடம் நம் மனதை நெருடும் ஒரு இடமென்பதில் எந்த ஒரு சந்தேகமுமில்லை. விடுமுறை நாட்களில் நாம் இங்கு வருவதன் மூலம் எண்ணற்ற இயற்கை காட்சிகளை கண்டு மனதினை தெளிவுபடுத்தி கொள்ளலாம் என்று பெருமையுடன் சொல்லலாம். சிம்லாவிலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் இந்த இடம்...பச்சை பசேல் என்னும் காட்சிகளை கொண்ட புல்வெளிகளாலும், தோட்டங்களாலும் நம் மனதை இதமாக்க துடிக்கிறது.

இங்கே அமைக்கப்பட்டிருக்கும் வசதியான அறைகளின் உதவியுடன் நாம் இளைப்பாரி மகிழ... வண்ணத்தால் காட்சிபடுத்தி வேறு வேறு அழகில் ஆகாயத்தை ஆக்கிரமிக்கும் வானம்...அதன் அழகில் நம்மை மெய்சிலிர்க்க வைத்து ஏக்கத்தை ஏற்படுத்துகிறது. அதன் அழகினை காணும் நம் கருவிழிகள், இமயமலையில் கூட இத்தகைய காட்சிகளை நான் கண்டதில்லையே என வாயடைத்து போய் தான் நிற்கிறது.

Iamitsatna

Read more about: travel

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more